உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள்

ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான சோட்டா ராஜன்,65 மீது கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த 2015 அக். 25ல் இந்தோனோஷியாவின் பாலி தீவில் பதுங்கியிருந்த சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு தெற்கு மும்பையில் கோல்டன் கிரவுன் சொகுசு ஹோட்டலின் உரிமையாளர் ஜெயா ஷெ ட்டி என்பவரை கொலை செய்த வழக்கில் இன்று மஹாராஷ்டிரா குற்றத்தடுப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி ஏ.எம். பாட்டீல், சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.ஏற்கனவே மஹாராஷ்டிராவின் பிரபல பத்திரிகையாளர் ஜெ.தேவ் என்பவரை 2011ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் 2018-ல் ஆயுள் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மே 30, 2024 23:09

இவனை எதுக்கு உயிரோடு வச்சுண்டு தண்ட செலவு. பல கொலைகள் செய்த இவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளினால் பாவம் கிடையாது..


Krishna Gurumoorthy
மே 30, 2024 21:40

2001 மண் ஆண்டு செய்த கொலைக்கு2024 ல் தீர்ப்புவாழ்க ஜனநாயகம்


கத்தரிக்காய் வியாபாரி
மே 30, 2024 20:42

இவனுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு மக்களின் வரிப்பணத்தில் தண்டச்செலவு. சும்மா ஒரு வருஷம் உபிக்கு அனுப்பி வையுங்கள். அந்த முதல்வர் கவனமா இவனை பார்த்துக்கொள்வார்.


M Ramachandran
மே 30, 2024 20:32

70 துக்கும் மேலே வழக்கு பிற்காடு கொலை வழக்கு இதற்கு ஆயுள் தண்டனை மட்டுமா? வினோதம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை