வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Please punish those who speak vulgarly about judges if they do not get the desired verdict
புதுடில்லி: நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கே முதல் முன்னுரிமை அளிப்பேன் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக ஆங்கிலச் செய்தி சேனல் நடத்திய மாநாட்டில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதாவது: சுப்ரீம் கோர்ட் சாமானிய மக்களுக்கும் உரியது. நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கே முதல் முன்னுரிமை அளிப்பேன். நிலுவையில் உள்ள வழக்குகளை முன்கூட்டியே தீர்ப்பதன் அடிப்படையில் தேசிய நீதித்துறை கொள்கையாக இருக்கும். கடந்த ஆறு மாதங்களில், நான் ஒரு மத்தியஸ்தப் பணியைத் தொடங்கியுள்ளேன். எனது கூட பணிபுரியும் நீதிபதிகளின் ஒத்துழைப்புடன், மத்தியஸ்தத்தை பிரபலப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். டிஜிட்டல் கைது வழக்குகள் இருக்கும் என்று யாரும் நினைத்ததில்லை. நாம் தொடர்ந்து பயிற்சித் திட்டங்களை நடத்த வேண்டும், மேலும் புதிய சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பது குறித்து நமது நீதித்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.இதுபோன்ற ஒரு குற்றம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து புரிந்துகொள்ளும் வரை, நீதித்துறையால் இதுபோன்ற வழக்குகளை கையாண்டு நீதி வழங்க முடியாது. இதற்கு, நீதித்துறை தகவமைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு சூர்யகாந்த் பேசினார்.
Please punish those who speak vulgarly about judges if they do not get the desired verdict