உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூங்காற்று நெடுகையில் துாய்மைப்பணி தீவிரம்

பூங்காற்று நெடுகையில் துாய்மைப்பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: புதர்மண்டிய பூங்காற்று நெடுகையில் துாய்மைப்பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டி பகுதி வழியாக பூங்காற்று நெடுகை, கோட்டமேடு வரை செல்கிறது. இந்த பூங்காற்று நெடுகையில், பஞ்சப்பட்டி பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் செல்கிறது. தற்போது, பூங்காற்று நெடுகையில் அதிகமான செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில், மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பஞ்., நிர்வாகம் சார்பில், தேசிய ஊரக தொழிலாளர்கள் மூலம் புதர்களை அகற்றி, துாய்மைப்பணி விறுவிறுப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ