உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்படி எல்லாம் இல்லை... நாங்க ரூ.12 லட்சம் சம்பளம் தரோம்.. மவுனம் கலைத்த காக்னிசன்ட்

அப்படி எல்லாம் இல்லை... நாங்க ரூ.12 லட்சம் சம்பளம் தரோம்.. மவுனம் கலைத்த காக்னிசன்ட்

புதியதாக வேலைக்கு சேருவோருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.12 லட்சம் வரை தருவதாக பன்னாட்டு ஐ.டி., நிறுவனம் காக்னிசன்ட் விளக்கம் அளித்துள்ளது.பன்னாட்டு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள காக்னிசன்ட் நிறுவனத்தில் அண்மையில் ஊதிய விவகாரம் பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. அந்நிறுவனத்தில் புதியதாக வேலைக்கு சேருவோருக்கு வெறும் ரூ.2.52 லட்சம் மட்டுமே ஊதியாக தரப்படுவதாகவும், ஊதிய உயர்வு என்பது ஒரு சதவீதம் மட்டுமே என்றும் தகவல்கள் வெளியாகின.சமூக வலைதளங்களில் பற்றிய இந்த செய்தி, பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இதையடுத்து, காக்னிசன்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது; புதியதாக என்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இணையதளங்களில் வெளியான தகவல்கள், இன்ஜினியரிங் பட்டதாரிகள் அல்லாமல், இளங்கலை, அறிவியல் பட்டப்படிப்புகளை முடித்தவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் பற்றியது.இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டதாரிகள் பிரிவுகளில் ஆட்சேர்க்கை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால் ஊதியம் குறைவு என்பது பற்றிய வெளியாகி இருக்கின்றன. மற்ற நிறுவனங்களை காட்டிலும் காக்னிசன்ட் நிறுவனம் அதிக ஊதியம் வழங்குகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A.Gomathinayagam
ஆக 19, 2024 14:18

மற்ற பட்டதாரிகளுக்கும் இன்றைய விலைவாசியில் மிகவும் குறைவு ,இன்று கட்டிட வேலை பார்க்கும் சிற்றாலே தினக்கூலி இதை விட அதிகம்வாங்குகிறார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை