உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.199 கோடி வரி பாக்கி: காங்கிரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

ரூ.199 கோடி வரி பாக்கி: காங்கிரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ.199 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.கடந்த 2018 ம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கான கால அவகாசம் டிச.,31ம் தேதி முடிந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 2019 ம் ஆண்டு பிப்.,2 ல் கணக்கை தாக்கல் செய்ததுடன், வருமானம் கிடைக்கவில்லை. ரூ.199.15 கோடிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறியது.அதே ஆண்டில் செப்., 19ல் இந்த மனுவை வருமானவரித்துறை அதிகாரி ஆய்வு செய்த போது , ரூ.14.49 லட்சம் நன்கொடையை பணமாக பெற்றதுடன், ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் நன்கொடை அளிப்பவர்கள் டிடி அல்லது செக் மூலம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற விதியை மீறி பணமாக பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து காங்கிரஸ் வாங்கிய நன்கொடை முழுவதுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதும், காங்கிரஸ் கேட்ட வருமான வரி விலக்கை தள்ளுபடி செய்து 2021ம் ஆண்டு வருமானவரித்துறை உத்தரவிட்டது. 2023ம் ஆண்டு வருமான வரித்துறை(மேல்முறையீடு) கமிஷனர், இந்த உத்தரவை உறுதி செய்தார்.இதனை எதிர்த்து காங்கிரஸ் , வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இங்கும் காங்கிரஸ் கட்சிக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. விலக்கு அளிக்க கோருவதற்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Guru
ஜூலை 23, 2025 13:45

வரி கட்டறத்துக்கு யோக்கித இல்லாத நீங்கல்லாம் எதுக்கு கட்சி நடத்துறீங்க.


Kasimani Baskaran
ஜூலை 23, 2025 04:08

காங்கிரஸ் கொள்ளைக்கூட்டம் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே கிடையாது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து பணம் கொண்டுவரமுடியாது என்று கட்டுப்பாடு இருக்கும் பொழுது மாற்று வழிகளை உண்டு பண்ணி பணம் கொண்டுவருவது கேவலம்.


Iyer
ஜூலை 22, 2025 23:26

 சோனியா, ராகுல், பிரியங்கா இன்னும் காங்கிரஸ் கட்சியை நடத்துவதன் காரணம் - கட்சிமீது பாசம் அல்ல.  காங்கிரஸ்க்கு சொந்தமாக பலகோடி சொத்துக்கள் நாடு முழுவதும் உள்ளன.  காங்கிரஸ் PRESIDENT தலைவர் தான் அந்த சொத்துக்களின் CUSTODIAN ஆவர்.  அதனால் தான் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை - எடுபுடிகளுக்கு மட்டும் - இந்த குடும்பம் கொடுக்கும்  SASHI THAROOR போன்ற - சொந்தமாக யோசிக்கும் சக்தி உள்ள எவரையும் இந்த குடும்பம் ஏற்காது.  கார்கே போன்ற எடுபுடிகள் தான் இந்த ராஜ குடும்பத்திற்கு தேவை.


வாய்மையே வெல்லும்
ஜூலை 22, 2025 21:48

முச்சூடும் திருட்டு பய க்ரூப்பு தான் காங்கிரஸ் ஆளுங்களோட லட்சணம் ..


தாமரை மலர்கிறது
ஜூலை 22, 2025 21:22

காங்கிரஸ் கட்சியை தடை செய்ய தேவையான ஆதாரங்கள் உள்ளன.


சமீபத்திய செய்தி