உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் குறித்து காங்., முதலைக்கண்ணீர்: லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் பதிலடி

விவசாயிகள் குறித்து காங்., முதலைக்கண்ணீர்: லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் பதிலடி

புதுடில்லி: விவசாயிகள் குறித்து காங்., முதலைக் கண்ணீர் வடிக்கிறது என லோக்சபாவில் , மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்.பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது*தற்போது தாக்கல் ஆன பட்ஜெட் மிஷன் 2047 க்கான முதல் படியாகும்.*பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.48.21 லட்சம் கோடி*கோவிட் காலத்தில் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் மீண்டெழுந்தோம்*சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு *2014 ஐ விட விவசாய துறைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.*சுகாதாரத்துறைக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*பட்ஜெட்டில் எந்த துறைக்கும் நிதி குறைக்கப்படவில்லை. கல்விக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டு உள்ளது.*நகர்ப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.*இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக மக்கள் மாற்றி உள்ளனர்.*நிதிப்பற்றாக்குறை, நாட்டின் ஜிடிபி.,யில் 4.9 சதவீதமாக இருக்கும்.*காஷ்மீரை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 42,277 கோடி ரூபாய் காஷ்மீர் மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.*2047 க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்களது நோக்கம்.*இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறுவது தவறு*பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால், அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமில்லை.*தவறான புரிதலோடு சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.*தவறான கருத்துகளை பரப்பும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.*சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.*ஐமுகூ ஆட்சி பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.*2004-05 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இல்லை. அதற்காக அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையா*2006-07 பட்ஜெட்டில் 13 மாநிலங்களின் பெயர் இல்லை.*2009- 2010 ஆண்டுகளில் 2 மாநிலங்களின் பெயர் மட்டுமே இருந்தது.*நீங்கள் செய்தால் தவறில்லை. நாங்கள் செய்தால் மட்டும் தவறா*மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன*பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவிற்கு பெரிய நெடுஞ்சாலை திட்டம்அறிவிப்பு*கேரளாவின் விழிஞம் துறைமுகம் அதானிக்கு ஒப்படைக்கப்பட்ட போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. லோக்சபாவில் ஏ1 ஏ2 எனக்கூறியவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை*ஐமுகூ ஆட்சியில் வேலைவாய்ப்பு குறித்து காங்., விவாதிக்கவில்லை.* விவசாயிகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.*குறைந்தபட்ச ஆதார விலையை ஐமுகூ., ஏற்றுக் கொள்ளவில்லை.*விவசாயிகள் குறித்து காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது* ஐமுகூ., ஆட்சியின் போது வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் விவாதிக்க மறுத்தது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஜூலை 31, 2024 00:24

அவிங்க முதலைக்கண்ணீர் இவிங்க ஓநாய் கண்ணீர். ரெண்டும். ஒண்ணுதான்.


ES
ஜூலை 30, 2024 22:31

No one believes these lies anymore


K.n. Dhasarathan
ஜூலை 30, 2024 21:38

நிதி ஆமைச்சர் முக்கிய விஷயங்களை பேசாமல் மறைக்கிறார், விவசாயிகளை பற்றி பேச பொய் ஜே பி அரசுக்கு எந்த தகுதியும் கிடையாது. இரன்டு வருடங்களுக்கு மேல் அவர்கள் டெல்லியில் போராடியபோது எட்டிக்கூட பார்க்கவில்லை, குறைந்த பட்ச ஆதார விலை பற்றி பேச வில்லை, நீதிமன்றம் குட்டியபோது பேசவில்லை, சட்டங்களை திரும்ப பெற்றது இந்த அரசு தானே, எப்படி வெட்கமே இல்லாமல் பேசுகிறார் ?


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:47

முதலைக்கண்ணீர், சரியாக கூறினீர்கள்.


sankaranarayanan
ஜூலை 30, 2024 20:38

நீங்கள் தயவுசெய்து ஒருமுறை எல்லா மாநிலங்களின் பெயர்களையும் வாசித்துவிடுங்கனே அதில் என்ன சிரமம் இருக்கிறது எதிர்கட்சிகள் சந்தோஷப்படுவார்கள்


ஆரூர் ரங்
ஜூலை 30, 2024 18:01

ஆந்திர பீகார் மாநிலங்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மொத்த பட்ஜெட்டில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு. ஏற்கனவே கொடுத்த நிதியில் பேக்கேஜ் போட்டுத் தின்ற திருட்டுகும்பலுக்கு யார் மேலும் ஒதுக்குவர்?


T.sthivinayagam
ஜூலை 30, 2024 17:54

முதலைகள் ஒன்றை ஒன்று கூட்டி காட்டி மக்களை விழிங்கிவிடும் என்று மக்கள் பயப்படுகின்றனர்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி