உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா எம்.பி.,யாகும் பிரியங்கா?: ஹிமாச்சலில் இருந்து அனுப்ப காங்., முடிவு

ராஜ்யசபா எம்.பி.,யாகும் பிரியங்கா?: ஹிமாச்சலில் இருந்து அனுப்ப காங்., முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காலியாகும் ராஜ்யசபா எம்.பி.,க்கான தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை போட்டியிட வைத்து எம்.பி.,யாக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.நாடு முழுதும் 15 மாநிலங்களில் 50 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் வரும் ஏப்.,2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள இரண்டு மாநிலங்களை சேர்ந்த 6 எம்.பி.,க்கள் வருகின்ற ஏப்.,3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள். இதில் உ.பி.,யில் (10), மஹாராஷ்டிரா, பீஹாரில் தலா 6, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசாவில் தலா 3, உத்தரகண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா 1 என 56 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி காலியாகிறது.இத்தேர்தலுக்கான அறிவிப்பு பிப்.8ம் தேதி வெளியாகும். பிப்.,15ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்.,16ம் தேதி நடைபெறும். பிப்.,27ம் தேதி தேர்தல் நடைபெறும் அன்றைய தினமே, முடிவுகளும் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.கடந்த 2022ல் ஹிமாச்சலில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் மொத்தம் 40 தொகுதிகளில் வென்றது; பா.ஜ., 25ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்திற்கான ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் பெற்றது. தற்போது ஹிமாச்சலில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளார். அந்த சீட்டை காங்., பெற்றுள்ளதால், அந்த இடத்தில் பிரியங்காவை போட்டியிட வைத்து ராஜ்யசபாவிற்கு அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ramesh Sargam
ஜன 31, 2024 07:23

எம்.பி. ஆகி என்ன செய்யப்போகிறார். மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும். இவர் எம்.பி. ஆனாலும் பார்லியமென்டிற்கு செல்வது ஒரே ஒரு விஷயத்துக்குத்தான் இருக்கும். சபை ஆரம்பித்தவுடன், ரகளையில் ஈடுபட்டு, வெளியேறிவிடுவார்கள். அதைவிட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். அதைத்தான் இப்பொழுது ராகுல் காந்தியும் செய்துகொண்டிருக்கிறார். தண்டமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் பல சலுகைகள் - எல்லாம் மக்கள் வரிப்பணத்தில்.


Libra
ஜன 30, 2024 16:40

காலையில் நிர்மலா சீதாராமன் மக்களவை தொகுதியில் போட்டயிடாமல் அமைச்சர் ஆனது எப்படி என்று பேசினோம், மாலையில் ராஜ்யசபா உறுப்பினர் ஆவது பற்றி சொல்லுவோம்... காங்கிரஸ்க்கு (இல்ல திமுக கூட இருக்கலாம்) கைவந்த கலை தான்


ஆரூர் ரங்
ஜன 30, 2024 16:13

பாட்டி இந்திரா காந்தி கூட முதன்முறையாக பிரதமரானது ராஜ்யசபா (நியமன எம்பி) மூலமாகத்தான். தி.மு.க மொழியில் புறவாசல் நுழைவு. பேத்தியும் மக்களை????‍???? சந்திக்க அச்சப்பட்டு.


N. Srinivasan
ஜன 30, 2024 16:12

சரியான முடிவு......சீக்கிரம் உள்ளே போங்க இன்னும் கொஞ்ச நாட்களில் காங்கிரஸ் ஆட்சியே எந்த மாநிலத்திலும் இல்லாமல் போய்விடும் அப்போது இந்த வழி கூட கிடைக்காது உள்ளே போக.......


RAMESH
ஜன 30, 2024 18:17

நிதர்சனமான உண்மை


saravan
ஜன 30, 2024 16:01

ஒரு ஆன் பப்பு ஒரு பெண் பப்பு...ஹோஹயா


விடியல்
ஜன 30, 2024 14:39

தேர்தலில் நின்று மக்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது


Barakat Ali
ஜன 30, 2024 13:41

அடப்போங்கப்பா .... மன்மோகனே தேர்ந்தெடுக்கப்படாமல் பிரதமராகவே இருந்து டைம் பாஸ் பண்ணிட்டார் .......


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜன 30, 2024 13:41

பிரியங்கா வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெறுகிற வாய்ப்பு இல்லை என்பதால் இப்படி குறுக்கு வழியில் அவரை ராஜ்யசபா எம்.பியாக்க முடிவு செய்து விட்டனர். அநேகமாக தேர்தலில் நிற்க வைத்து ரிஸ்க் எடுக்காமல் ராகுல்காந்தியையும் இதே போன்று ராஜ்யசபாவுக்கு எம்.பியாக்க காங்கிரஸ் கட்சியினர் முயற்சிப்பார்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாக போய் விட்டது என்பதற்கு இது ஒன்றே சாட்சி!


abdulrahim
ஜன 30, 2024 16:25

ராஜ்ஜியசபாவில் இப்போ இருக்கிற 97 பாஜக எம்பியும் இப்படித்தான் ரிஸ்க் எடுக்காம உள்ளே உட்க்கார்ந்திருங்கங்க ,அதுலயும் உங்க நிர்மலா மேடமும் ,ஜெய்சங்கரும் கூட ரிஸ்க் எடுக்காமலேயே அமைச்சரா உட்க்கார்ந்திருக்காங்க.


கணேசன்
ஜன 30, 2024 13:30

போட்டியே இல்லாத இடத்தில் இருந்து போட்டியிடுவது ஒரு போட்டியா ? அப்பொழுதுதான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என்று சொல்வதற்கா ?


SANKAR
ஜன 30, 2024 14:38

Do you know? Nirmala Sitaraman NEVER contested in open poll.ALWAYS RAJYA SABHA MP.


தத்வமசி
ஜன 30, 2024 15:22

சங்கர், நல்ல காமெடி பண்ணுறீங்க... வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் எங்கே... தேவைக்கு ஏற்ப ஏதாவது தேர்தலில் போட்டியிடுவது எப்படி ? நீங்கள் தான் மார் தட்டிக் கொள்கிறீர்களே (பொய்யான) காந்தி வாரிசு... காங்கிரஸ் தலைவி.. மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.. தலைவர்கள் பின் தொடர்கிறார்கள் இருபத்து எட்டு கட்சியுடன் கூட்டணி... என்று உதார் விட வேண்டியது. கொல்லைப்புறமாக வழியை தேட வேண்டியது.


abdulrahim
ஜன 30, 2024 16:26

கொல்லைப்புற அரசியல் நுழைவை பற்றி யார் பேசுறது னு ஒரு விவஸ்த்தை இல்லாம போயிடுச்சி


குமரி குருவி
ஜன 30, 2024 13:27

பிரபலமான ஒரு அரசியல்வாரிசுக்கு எம்.பி.பதவி தருவது குற்றமா....


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ