மேலும் செய்திகள்
சத்தீஸ்கரில் துப்பாக்கி சண்டை 12 நக்சல் பலி
22 minutes ago
பதிலடி கொடுப்பேன்!
37 minutes ago
புதுடில்லி: நாட்டின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரசுக்கு, 2024 - -25ம் நிதியாண்டில், 517 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிளுக்கு, பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகள் உள்ளிட்டவை மூலம் நன்கொடை பெறப்படுகிறது. கடந்த, 2024 - -25ம் நிதியாண்டுகளில் கிடைத்த நிதி குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் ஆளும் பா.ஜ., தேர்தல் அறக்கட்டளைகள் மூலம், 959 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், 517 கோடி ரூபாயை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகள் மூலம், 313 கோடி ரூபாய் உட்பட மொத்தம், 517 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. முக்கிய பெருநிறுவனங்களான, 'ஐ.டி.சி., ஹிந்துஸ்தான் ஜிங்., சென்சுரி பிளைவுட்ஸ் இந்தியா' ஆகியவை கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளன. இது தவிர முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், மூன்று கோடி ரூபாயை கட்சிக்கு நிதியாக அளித்துள்ளார். புதிய ஜனநாயக தேர்தல் அறக்கட்டளை மற்றும் முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை ஆகியவை கட்சிகளுக்கு நிதியளித்துள்ளன. இது தவிர மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, 184.50 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. இதில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் 153.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
22 minutes ago
37 minutes ago