உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "முக்கியமான அரசு பணிகளில் ஒப்பந்த முறை தடுத்து நிறுத்தப்படும்": கார்கே வாக்குறுதி

"முக்கியமான அரசு பணிகளில் ஒப்பந்த முறை தடுத்து நிறுத்தப்படும்": கார்கே வாக்குறுதி

புதுடில்லி: 'வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முக்கியமான அரசு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது தடுத்து நிறுத்தப்படும்' என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாக்குறுதி அளித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு, தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தொழிலாளர்களுக்கான சுகாதார உரிமைகள் குறித்த சட்டம் உருவாக்கப்படும். இதன் உடன், தேவையான பரிசோதனைகள், இலவச சிகிச்சை, மருந்துகள், மறுவாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை உள்ளிட்ட அமைப்புசாரா துறையினர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட உலகளாவிய சுகாதாரம் வழங்கப்படும். நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் நாளொன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தைப்போல் நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

குறைந்தபட்ச ஊதியம்

தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம். நகர்ப்புறங்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை கொண்டு வருவோம். அமைப்புசாராத் துறையில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு வழங்கப்படும். பா.ஜ, ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரிய திருத்தங்களை கொண்டு வருவோம். முக்கியமான அரசு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே தெரிவித்துள்ளார்.விவசாயிகள், இளைஞர்கள், மகளிருக்காக ஏற்கனவே தலா 5 வாக்குறுதிகள் வீதம் 15 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை