உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு புனே போலீசார் சம்மன்

சர்ச்சை பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு புனே போலீசார் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மாவட்ட கலெக்டர் மீது பாலியல் புகார் தெரிவித்த சர்ச்சை பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு புனே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற பெண் பயற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி புனேயில் உதவி கலெக்டராக பணியாற்றிவந்த நிலையில் தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது, தனது மாற்றுத்திறனாளி என முறைகேடு செய்தது சாதி சான்றிதழை பயன்படுத்தியது போன்ற சர்ச்சைகளில் சிக்கியதால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது. பூஜா கேத்கரின் பயிற்சியை மஹாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்தது.இதனால் ஆத்திரமடைந்த பூஜா கேத்கர், புனே மாவட்ட கலெக்டர் சுகாஷ் திவாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இந்நிலையில் புனே போலீசார் பூஜா கேத்கருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rangarajan
ஜூலை 17, 2024 23:50

ஏன் இவ்வளவு தில்லாலங்கடி வேலை


Shankar
ஜூலை 17, 2024 22:43

இவர் வரும்காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு கலெக்டர் ஆனால் மாவட்டம் எப்படி உருப்படும்?


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி