உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  முப்படைகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: தலைமை தளபதி

 முப்படைகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: தலைமை தளபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய முப்படைகளிடையே ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவை என, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார். டில்லியில் இந்திய ராணுவ பாரம்பரிய திருவிழா கடந்த 14 முதல் 15 வரை நடந்தது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவு கான் தன் புதிய நுாலை வெளியிட்டு பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை எடுத்த போது ராணுவம், கடற்படை, விமானப்படை மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. நம் மேற்கு எல்லைக்கு தளவாடங்களை அனுப்ப வேண்டியிருந்தது. அதை விமானப் படை செய்தது. கடற்படையும் எல்லை தாண்டிய தாக்குதலில் பங்கு வகித்தது. எதிர்காலத்தில் இந்த ஒருங்கிணைப்பை இன்னும் விரைவானதாக மாற்ற எல்லைகளில் ஒருங்கிணைப்பு மையம் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ