உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி

எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி

புதுடில்லி; மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர் அக்கட்சியின் மூத்த பிரமுகர் சீதாராம் யெச்சூரி. 72 வயதாகும் அவர், 2015ம் ஆண்டு முதல் தற்போது 3வது முறையாக பொதுச்செயலாளர் பொறுப்பை கவனித்து வருகிறார்.இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்க நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யெச்சூரிக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, உடனடியாக யெச்சூரியை தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் தான் யெச்சூரி, கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ