இளைஞர் கொலை
பெங்களூரின், சீனிவாச நகரில் வசித்த விஜய், 21, வெல்டராக பணியாற்றினார். ஹனுமந்த நகரில், நேற்று முன் தினம் நள்ளிரவு, நண்பர்களுடன் நடந்த பார்ட்டியில் பங்கேற்றார். குடிபோதையில் தகராறு நடந்தது. அப்போது நண்பர், விஜயை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடினார். இளைஞர் தற்கொலை
பெலகாவி புறநகரின், கனபர்கி கிராமத்தில் வசித்தவர் சித்தராய சிகிஹள்ளி, 24. இவர் நேற்று முன் தினம் இரவு, நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்ல தயாரானர். ஆனால் பெற்றோர் பார்ட்டிக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்கும்படி கூறினர். இதனால் மனம் வருந்திய அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் இருவர் பலி
ஷிவமொகா, பத்ராவதியின், சீகேபாவி கிராமத்தில் நேற்று காலை சென்ற பைக் மீது, பொலீரோ ஜீப் மோதியது. பைக்கில் பயணித்த சேத்தன், 25, ரமேஷ், 25, காயமடைந்து உயிரிழந்தனர். மாணவர்களுக்குள் அடிதடி
ராய்ச்சூரின், தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் இடையே, நேற்று காலை தகராறு நடந்தது. அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தாக்க, ஏழாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் பகுதியில் வசிக்கும் இளைஞர்களை கத்தி, இரும்புத்தடி போன்ற ஆயுதங்களுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர். இதையறிந்த போலீசார் அங்கு சென்றதால், ஆயுதங்களை போட்டுவிட்டு இளைஞர்கள் தப்பியோடினர்.