மேலும் செய்திகள்
2வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்கு
29 minutes ago
புதுடில்லி: லாக்கப்களில் நடக்கும் வன்முறையை நாடு பொறுத்துக் கொள்ளாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.போலீஸ் ஸ்டேசன்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது ராஜஸ்தானின் உதய்ப்பூர் பகுதியில் லாக்கப்களில் 11 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது: ராஜஸ்தான் போலீஸ் ஸ்டேசன்களில் கடந்த 8 மாதங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை நாடு சகித்துக் கொள்ளாது. இது அமைப்பு மீதான குறை. லாக்கப் மரணங்கள் நடக்கக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏன் அபிடவிட் தாக்கல் செய்யவில்லை . நீதிமன்றத்தை சாதாரணமாக மத்திய அரசு எடுத்துக் கொள்கிறதா என கேள்வி எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், லாக்கப் மரணத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது. இந்த வழக்கில் நான் ஆஜராகவில்லை. அதேநேரத்தில் இந்த நீதிமன்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என விளக்கமளித்தார்.இதனையடுத்து இந்த வழக்கில் அடுத்த 3 வாரத்தில் அபிடபிட் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
29 minutes ago