உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடனக்காரி ஐஸ்வர்யா ராய்: ராகுல் சர்ச்சை பேச்சு

நடனக்காரி ஐஸ்வர்யா ராய்: ராகுல் சர்ச்சை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்., எம்.பி., ராகுல் நடிகை ஐஸ்வர்யா ராயை நடனக்காரி ஐஸ்வர்யா ராய் என கூறியது பேசு பொருளாகி உள்ளது.எம்.பியாக உள்ள ராகுல் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுவருகிறார். உ.பி., மாநிலம் அமேதி தொகுதியில் பயணம் மேற்கொண்ட ராகுல் தொடர்ந்து வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: அனைத்து ஊடகங்களும் அம்பானி, அதானி-க்கு சொந்தமானது. அவர்கள் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளின் பிரச்னைகளை காட்டப் போவதில்லை. அவர்களால் முடியாது. ஊடகங்களில் எதையாவது காட்ட வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ராய் நடனம் ஆட வேண்டும். பிரதமரை 24 மணி நேரமும் காட்டவேண்டும். அமிதாப்பச்சனையும் காட்டவேண்டும். என்றார். முன்னதாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி, சமுதாய மக்கள் அழைக்கப்படவில்லை; அவர்கள் ஒதுக்கப்பட்டனர். நடனக்காரி ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் ஆகியோர் தான் அழைக்கப்பட்டனர் என்றார்.ராகுலின் இந்த பேச்சு ஐஸ்வர்யா ராய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி