உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஹனுமன் கோயிலில் கெஜ்ரிவால் சுவாமி தரிசனம்

டில்லி ஹனுமன் கோயிலில் கெஜ்ரிவால் சுவாமி தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திகார் சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டில்லியில் உள்ள ஹனுமன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.மதுபான கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை 'இண்டியா' கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர். இதையடுத்து கட்சி தொண்டர்கள் முன் பேசிய கெஜ்ரிவால், இன்று மதியம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.இதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி கட்சியினர் செய்துள்ளனர்.இந்நிலையில், டில்லியின் கன்னாட் பேலசில் உள்ள ஹனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன், மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன்னும் உடன் சென்றார். கெஜ்ரிவால் வருகையைத் தொடர்ந்து ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venkatakrishna
மே 12, 2024 15:49

கெஜ்ரிவால் ஒரு புத்திசாலி அவரின் கூட்டணி ஆட்கள் இவரைவைத்து கேம் ஆடுகிறார்கள் தன்னைசுற்றியுள்ள கருப்பாடுகளை நன்கு அறியப்பட்ட பின் கழட்டி விட வேண்டும்


HoneyBee
மே 11, 2024 14:05

தேர்தல் வந்தாலே இந்து கடவுள் எல்லாம் இவர்கள் கனவில் ஓட்டாக தெரிகிறார்கள் ஏன் இந்த கெஜ்ஜு சனாதனம் பற்றி பேசும் போது எங்கே போனார்


karthik
மே 11, 2024 13:58

மிகவும் ஆபத்தான அரசியல் வியாதி இவர்


கண்ணன்
மே 11, 2024 13:46

மதமாற்றம் செய்யப்பட்டவர்-


RAAJ68
மே 11, 2024 13:17

திருட்டு கும்பலுக்கு சாமி தரிசனம் தேவையா.


vadivelu
மே 11, 2024 14:04

ஹனுமார் அயோக்கியர்களை மட்டுமே தண்டிப்பார்


Iniyan
மே 11, 2024 13:11

நல்லா நாடகம் ஆடுவார்


Ramesh Sargam
மே 11, 2024 12:46

ஹிந்துக்களை வாக்குகளை கவர தரிசனம்


Lion Drsekar
மே 11, 2024 12:34

உச்சநீதிமன்றமே இவர்களைப்போல் உள்ளவர்கள் எந்த ஒரு தலை குனிவும் இல்லாமல் சட்டபூர்வமாக தேர்தல் முடியும் வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்று கூறியதால் இவருக்கு வேறு என்ன தேவை ? மேலும் சிறையில் இருந்தாலும் இவர்தான் முதல்வர் , இதற்க்கு அவர் வெளியேயே இருக்கலாம் என்று முடிவாகிவிட்டதால் ஜனநாயகமும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டும் இதே போன்று சிறைகளில் தவறு செய்து உள்ளே இருக்கும் எல்லோருமே வெளியே வந்து அவரவர்கள் பதவிக்கு மீண்டும் வரலாம் என்பது இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட்டு வித்திட்டது பாராட்டுக்குரியது யார் வேண்டுமானாலும் இனி லஞ்சம் வாங்கலாம், ஜெலுக்கு போகலாம் , உள்ளே இருந்தாலும் அமைச்சர், வெளியே இருந்தாலும் அமைச்சர், பொது மகள்களின் குறைகளுக்கு பல தலைமுறை காத்திருக்கவேண்டிய ஒரு நிலையில் நீதித்துறை ஆனால் அரசியல் பிரநிதிகள் என்றால் அடுத்த நிமிடமே தீர்வு அப்போ நாட்டு மகள்கள் தங்கள் தேவைகளைக் கருதி எல்லோருமே அரசியல் கட்சி துவங்கினால் இரவோடு இரவாக நீதி கிடைக்கும் என்ற நிலை பிறந்து விட்டோம் , அனுபவித்துதானே ஆகவேண்டும் வாழ்க முடியாட்சி , வந்தே மாதரம்


மேலும் செய்திகள்