உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

புதுடில்லி:டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.மேலும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டில்லி ராம் மனோகர் லோகிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டில்லியில் கடந்த புதன் கிழமையன்று காலை ஐகோர்ட் வாசலில் குண்டுவெடித்து. இதில் 12 பேர் பலியாயினர். 72 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராம்‌ மனோகர் லோகிதா ,மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் தெற்கு டில்லியைச் சேர்ந்த பி.பாட்ரா (58) என்பவர் சிகிச்சை பலனி்ன்றி உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மூன்று பேர் மிகவும் ஆபத்தானநிலையில் ராம் மனோகர் லோகிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ‌பிரிவில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ