மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
8 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
8 minutes ago
குட்கா விற்றவர் கைது
13 minutes ago
புதுடில்லி: டில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், இன்று (ஜூன் 18) 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையை எட்டக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.நாடு முழுவதும் கோடை காலம் இன்னும் முடிவடையாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த மாநிலங்களில் இதுவரை வெயிலின் தாக்கத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.டில்லியில் இன்று 45 டிகிரி செல்சியஸ் (113 பாரன்ஹீட்) வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை, டில்லி, உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா, டில்லியில் பகலில் வெயிலின் கொடுமை போக, இரவிலும் வெக்கை நீடிக்கிறது. ஜூன் 27க்கு பிறகு உ.பி., டில்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் படிப்படியாக வெப்பநிலை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minutes ago
8 minutes ago
13 minutes ago