உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 126 டிகிரி வெயில் பதிவு

டில்லியில் 126 டிகிரி வெயில் பதிவு

புதுடில்லி, அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள், ஓட்டுப் பதிவு முடிந்த நிலையில், தேசிய தலைநகர் டில்லி யில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு, 126 டிகிரி வெயில் பதிவானது.வாட்டி வதைக்கும் வெயில் என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, கொளுத்தும் வெயில், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வெள்ளம் என பருவம் தவறிய இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது. உலகளாவிய பருவநிலை மாறுபாடு பிரச்னை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.கேரளாவில் மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே நேரத்தில் அருகில் உள்ள தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையும், பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெயிலும் நிலவுகிறது. நாட்டின் வட மாநிலங்களில் தற்போது கோடைக்காலம் வறுத்தெடுத்து வருகிறது. குறிப்பாக தொடர்ச்சி 14ம் பக்கம்

பீஹாரில் மாணவர்கள் மயக்கம்

கோடை விடுமுறை முடிந்து, பீஹாரில் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், 42 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக நேற்று வெயில் பதிவானது. இதனால், 3-0க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் மயங்கி விழுந்தனர்.ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி யில், 16 மாணவியர் மயங்கி விழுந்தனர். ரிக் ஷாக்களில் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேகுசராயில் உள்ள நடுநிலைப்பள்ளியில், 12க்கும் அதிகமான மாணவ - மாணவியர் மயங்கி விழுந்தனர். இவ்வாறு பல இடங்களில் மாணவர்கள் மயக்கமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பள்ளிகளை, ஜூன், 8ம் தேதி வரை மூட, பீஹார் அரசு நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ