உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பு; அதிகாரிகளுக்கு தடை போட்டது மத்திய அரசு

நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பு; அதிகாரிகளுக்கு தடை போட்டது மத்திய அரசு

புதுடில்லி: சமீபத்தில், கேபினட் செயலர் டி.வி.சோமநாதன் மத்திய அமைச்சகத்தில் உள்ள, அனைத்து துறை செயலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், 'மத்திய அரசின் நல திட்டங்களுக்கு மக்களிடையே எப்படி வரவேற்பு உள்ளது... இதில் குறைகள் உள்ளதா? மக்கள் என்ன நினைக்கின்றனர். அவர்களுடைய கருத்து என்ன என்பது குறித்து, அரசுக்கு தெரிவதில்லை...'இதனால், புதுவிதமான திட்டங்களை அமல்படுத்துவதுடன், திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா எனவும், அரசுக்கு தெரிய வரும். எனவே, அரசு அதிகாரிகள் மக்களை சந்திப்பதுடன், சுய உதவிக் குழுக்களையும் சந்திக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.எதற்கு திடீரென இப்படி ஒரு உத்தரவு? இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், 'பொதுவாக, என்.ஜி.ஓ.,க்கள் மற்றும் மக்களை, அதிகாரிகள் சந்திப்பதுண்டு. அவர்களின் குறை, நிறைகளைக் கேட்டு, கேபினட் செயலருக்கு அனுப்புவர்; ஆனால், சில காலமாக இந்த சந்திப்பு நடப்பதில்லை; அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.ஒரு பெரிய சக்தி வாய்ந்த, 'லாபி' உருவாகிவிட்டது. 'யாருக்கு எங்கே, 'போஸ்டிங்' வேண்டும். அரசில் வேலை நடக்க வேண்டுமா?' என, அனைத்திற்கும் இந்த லாபி பணம் வாங்கியபடி, வேலை செய்கிறது. இதனால், அதிகாரிகள் யாரையும் சந்திப்பதில்லை; அச்சத்துடன் உள்ளனர்' என்றனர்.இதை அறிந்த கேபினட் செயலர் தன் அறிக்கையில், 'அதிகாரிகள் தனியாக சந்திக்க தயங்கினால், உங்களுடன் இன்னொரு அதிகாரியை வைத்துக்கொண்டு சந்திக்கலாம். ஆனால், இந்த சந்திப்புகள் உங்கள் அலுவலகத்தில் தான் நடக்க வேண்டும்; நட்சத்திர ஹோட்டல்களிலோ அல்லது கிளப்களிலோ அல்ல' என, தெரிவித்துள்ளார்.காரணம், 'இந்த பவர்புல் லாபி அதிகாரிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து, தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதைத் தவிர்க்கவே, அலுவலகங்களில் சந்திக்க வேண்டும்' என, சொல்லியிருக்கிறார் கேபினட் செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sasikumaren
ஜூலை 21, 2025 15:16

இதை எல்லாம் எப்போதோ அமல் படுத்தி இருக்க வேண்டும் மிகவும் தாமதமாக அறிவுறுத்தல் நட்சத்திர விடுதிகளில் என்ன ஒப்பந்தம் நடக்கிறது என்றே தெரியாது இது வரை எத்தனை லட்சம் கோடிகள் செலவு என்று கூட தெரியாது சரியான மரியாதைக்குரிய செருப்படி.


SUBBIAH RAMASAMY
ஜூலை 20, 2025 11:54

நல்ல விஷயம்


அப்பாவி
ஜூலை 20, 2025 09:32

இனிமே கோவில், குளக்கரை, ஆத்தங்கரையில் சந்திச்சு கச்சிதமா காரியத்த முடிச்சுக்கலாம். மாறுவேஷத்தில் போகலாம்.


சரோஜ்
ஜூலை 20, 2025 09:30

ஊழல் ஒழியல குமாரு. ஊழல் நடக்கும் விதம் கைமாறியிருக்கு. ஆட்சி மாறினா திருட்டு இந்தியர்கள் குணம் மாறுமா?


Rathinasabapathi
ஜூலை 20, 2025 20:46

உங்களுக்கு அந்த குணம் இருந்தால் ஏன் அனைத்து இந்தியர்களையும் அப்படி நினைக்கிறீர்கள். முதலில் தாங்கள் எப்படியோ இருந்து விட்டு போங்கள் அனைவரையும் அப்படி நினைக்காதீர்கள்.


முக்கிய வீடியோ