வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
53 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
பெங்களூரு: டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பதால், முக்கியமான மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கும்படி, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா சுகாதாரத் துறை வெளியிட்ட சுற்றறிக்கை: கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (ஜூலை 17) வரை மாநிலத்தில் 10,973 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர். டெங்கு பாதிப்பில் பெங்களூரு நகர் முதலிடத்திலும், சிக்கமகளூரு இரண்டாவது இடத்திலும் உள்ளது. முன்னெச்சரிக்கையாக, அரசு மருத்துவமனைகளில், டெங்கு நோயாளிகளின் சிகிச்சைக்கு படுக்கைகள் ஒதுக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை படுக்கைகள் ஒதுக்க வேண்டும். பெங்களூரின் கே.சி.ஜெனரல் மருத்துவமனையில் 25 படுக்கைகள், சி.வி.ராமன் மருத்துவமனையில் 25 படுக்கைகள், ஜெயநகர் பொது மருத்துவமனையில் 25 படுக்கைகள், எலஹங்கா மருத்துவமனையில் 10 படுக்கைகள், கே.ஆர்.புரம் மருத்துவமனையில் 10 படுக்கைகள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் தலா ஐந்து படுக்கைகளை டெங்கு நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
53 minutes ago
1 hour(s) ago