உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதுவரை இல்லாத பேரழிவு: கேரள முதல்வர் வேதனை

இதுவரை இல்லாத பேரழிவு: கேரள முதல்வர் வேதனை

திருவனந்தபுரம்: ‛‛ கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது எனவும், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளது'' என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து அங்கு நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளித்தார்.

கடுமையான மழை

அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இதயத்தை உலுக்கும் பேரழிவு. அதிகாலை 2 மணி, 4:10 மணியளவில் அடுத்தடுத்து கனமழை, நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தன. திடீரென பொழிந்த அதிகனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மிகக்கடுமையான மழை பெய்ததால், ஒரு பகுதி அழிந்தது. இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். இது இன்னும் அதிகரிக்கும். 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்க சென்ற பலர் அடித்து செல்லப்பட்டனர்.

நிவாரண முகாம்கள்

காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பலர் இன்னும் சிக்கி உள்ளனர். வயநாட்டில் 45 உட்பட மாநிலம் முழுவதும் 118 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, 5,531 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மீட்பு பணியில் ராணுவம் மற்றும் கடற்படை குழுவினர் உதவி வருகின்றனர். விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

மீட்பு படையினர்

வயநாட்டில் , தீயணைப்பு படையைச் சேர்ந்த 321 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ராணுவமும் தயார் நிலையில் உள்ளது. 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வயநாட்டை அடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து இன்னும் 89 பேர் வந்து கொண்டு உள்ளனர்.

உறுதி

நிலச்சரிவு குறித்து அறிந்த உடன், பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட பலர் உதவ முன்வந்துள்ளனர். இந்த பிரச்னையை சமாளிக்க இணைந்து செயல்படுவோம் என உறுதி அளித்துள்ளனர். 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

ஒப்படைப்பு

அவசர கால கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் தகவல்கள் உடனடியாக பேரிடர் மீட்புக்குழுவிடம் தெரிவிக்கப்படுகிறது. உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய போலீஸ் மோப்பநாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாயமானவர்கள் டுரோன் மூலம் தேடுதல் பணி நடக்கிறது. காயமடைந்தவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. முண்டக்கை பகுதியில் மீட்பு பணி சவாலாக உள்ளது. கனமழை சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மீட்பு பணிகள் சவாலாக உள்ளது.

572 மி.மீ.,மழை

48 மணி நேரத்தில் வயநாட்டில் 572 மி.மீ., மழை பெய்துள்ளது. கோழிக்கோடு, திருவனந்தபுரத்தில் மாநில கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. சூரல்மலை பகுதியில் கணிக்க முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. மண்ணில் புதைந்து எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்தது. 350 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

நிபுணர்கள் வரவழைப்பு

வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு திருச்சூர், கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். 108 ஆம்புலன்சுகளுடன் அவசர கால பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து சக்தியை ஒன்று திரட்டி மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sankaranarayanan
ஜூலை 31, 2024 04:38

தனக்கும் மிந்தியதை தானம் செய்தால் பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் இது தமிழக உழைக்கும் வர்க்கங்களின் நெற்றி வேர்வை நிலத்தில் அவர்களால் விழ உழைத்த பணம்


sankaranarayanan
ஜூலை 31, 2024 04:36

கொடுங்க கொடுங்க தாராளமாக கொடுங்க பிறகு மத்திய நிதி அமைச்சர் அம்மையார் இதை ஈடு செய்யவில்லை கொடுக்கவில்லை என்று கூறாதீர்கள்


RAAJ68
ஜூலை 31, 2024 03:53

ஆயிரம் வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைமுறையில் இருந்த கட்டுப்பாட்டை உடைத்து, மத காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீங்கள் பெண்களுக்கு சபரிமலை செல்வதற்கு அனுமதி அளித்த பிறகு இயற்கை சீற்றம் வருடா வருடம் தொடர்கிறது


sankaran
ஜூலை 30, 2024 23:24

தெய்வம் நின்று கொல்லும் ...பசு கன்னுகுட்டி மாம்ச வறுவல்...விளங்குமா நாடு...எங்கே கருத்து கந்தசாமி உலக்கை நாயகன்...எதுக்கு எடுத்தாலும் கேரளாவை கைய காட்டுவான் ...


M Ramachandran
ஜூலை 30, 2024 21:56

கம்யூனிஸ்ட்டுகளால் வன பகுதி 30% காடுகள் வீட்டு வைக்க பட்டது தன் பலன் உனக்களுக்கு கேடு பலன் மற்றும் தண் டம் உங்களுக்கு ஒட்டு போட்ட கேரள மக்களுக்கு


Murugesan
ஜூலை 30, 2024 21:52

அயோக்கியர்கள் ஆட்சி ஏழை மக்கள் பலி, நாசமாக போவானுங்க உண்டிக்குலிகளும் தெலுங்குதேச வந்தேறிய திருட்டு திராவிட அயோக்கியர்களும்


sankaranarayanan
ஜூலை 30, 2024 20:35

சென்ற ஆண்டு தமிழகத்தில் பெரும்பாதிப்பை உண்டாக்கியது இந்த ஆண்டு கேரளத்தில் நடந்துள்ளது இவர்களில் ஒருவர்கூட மத்திய அரசுடன் நட்பு ரிதியில் ஆட்சி செய்பவர்கள் அல்ல இருவரும் எப்போது பார்த்தாலும் எடுத்ததற்கெல்லாம் எதிரும் புதிருமாக செயல்படுவதனால் மக்கள்தான் அவதிக்குள்ளாகிறார்கள்


Swaminathan L
ஜூலை 30, 2024 20:14

வயநாட்டைப் பொருத்தவரை இது நிச்சயம் பேரழிவு தான். உயிர்கள், உடமைகள் மற்றும் சாலைகள் என்று பலவும் நாசமாகி விட்டது. அந்த சகோதர சகோதரிகள் விரைவிலேயே இத் துயரிலிருந்து மீண்டு நல்வாழ்வைத் தொடர பிரார்த்தனை செய்வோம், நம்மாலான உதவிகளைச் செய்வோம்.


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:00

சபரிமலைக்கு மாதவிடாய் பெண்கள் செல்லலாம் என்று கூறி வாதாடினீர்களே...


sridhar
ஜூலை 30, 2024 18:47

சைவம் வைணவம் தழைத்த கேரளாவை குட்டிச்சுவர் ஆக்கியது உங்க கம்யூனிசம் .


Raj Kamal
ஜூலை 30, 2024 22:29

எந்த நேரத்தில் எதை பேசுவது? உங்களுடைய சைவத்திலும் வைணவத்திலும் இதுவா போதிக்கப்பட்டுள்ளது? என்ன மனித ஜென்மமோ தெரியவில்லை?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை