உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவுரங்காபாத் பெயர் மாற்றம் எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

அவுரங்காபாத் பெயர் மாற்றம் எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

மும்பை மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் மற்றும் ஒஸ்மானாபாத் மாவட்டங்களின் பெயர் மாற்றத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டம் சத்ரபதி சம்பாஜி நகர் என்றும், ஒஸ்மானாபாத் மாவட்டம் தாராஷிவ் என்றும் பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை 2022ல் ஒப்புதல் அளித்தது. பெயர் மாற்றத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்து, அதற்கான அனுமதியையும் அளித்தது. இதையடுத்து, இரு நகரங்களின் பெயர் மாற்றத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. பெயர் மாற்ற முடிவை எதிர்த்து, மாவட்டங்களைச் சேர்ந்த பலர் பொதுநல மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளித்த மஹாராஷ்டிர அரசு, 'வரலாற்று சிறப்பிற்காக மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை' என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:மாநில அரசின் அறிவிப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இரு நகரங்களின் பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பில், சட்டத்துக்கு புறம்பாக எதுவும் இல்லை. ஆகையால், இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மே 09, 2024 07:03

பெயர்களை மாற்றிவிட்டால் மொகலாயர் கால ஆட்சியையும் அதன் கேடுகளையும் இந்தியர்கள் மறந்து விடுவார்கள் பாபர் குளம் வெட்டினார், மரம் நட்டார் என்றெல்லாம் உருட்டுவது அதற்கு முன் ஒருவனும் குளம் வெட்டவில்லை என்பது போன்ற காமடி ஆகவே பெயரை மாற்றுவதை விட அவர்களின் அக்கிரமங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதுதான் சரியானதாக இருக்கும் அது போக தென்கிழக்கு ஆசியாவையே வசப்படுத்திய சோழப்பேரரசு பற்றி இந்திய அளவில் பள்ளிப்பாடத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் கல்லணையே உலகின் அணைகளின் முன்னோடி


J.V. Iyer
மே 09, 2024 04:05

பழைய இந்தியப்பெயர்களுக்கு பல நகரங்கள் மாற்றப்பட்டுள்ளன இதில் என்ன தவறு? மற்ற பெயர்களையும் இந்தியப்பெயர்களுக்கு மாற்றவேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை