உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்மிருதி இரானியை விமர்சிக்காதீர்கள்: தொண்டர்களுக்கு ராகுல் அறிவுரை

ஸ்மிருதி இரானியை விமர்சிக்காதீர்கள்: தொண்டர்களுக்கு ராகுல் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவரையும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் அனைவரும் தவிர்க்க வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.2019 ம் ஆண்டு அமேதி தொகுதியில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம், ராகுல் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், ராகுல் மீண்டும் இதே தொகுதியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பிறகு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். அமேதி தொகுதியில் காங்., சார்பில் கிஷோரி லால் போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்கினார். இத்தேர்தலில் கிஷோரி லால் வெற்றி பெற்றார். இதனையடுத்து ஸ்மிருதி இரானியை காங்., தொண்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினர்.இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல், எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் ஏற்படும். ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவரையும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் அனைவரும் தவிர்க்க வேண்டும். மக்களை அவமானப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும் பலவீனத்தின் அடையாளம். வலிமை அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Subramaniam Mathivanan
ஜூலை 13, 2024 14:54

Rahul has to follow this by himself, before advising others


பேசும் தமிழன்
ஜூலை 13, 2024 09:39

இல்லை விமர்சிக்க சொல்லுங்க பார்ப்போம்.... அமேதியில் தோல்வி அடைந்து..... வயநாடு ஓடியது எல்லாம் மறந்து போச்சா.....


r k nawaz khan
ஜூலை 13, 2024 10:31

வயநாடுக்கு தானே போனாங்க


venugopal s
ஜூலை 12, 2024 23:28

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன என்ற பாடல் தான் ஸ்மிருதி இரானியை பார்க்கும் போது ஞாபகம் வருகிறது!


வேண்டா கோபால்
ஜூலை 13, 2024 07:54

அப்போ போன வாட்டி ராகுல் தோல்வி அடைந்தப்ப நீங்க என்ன சொன்னீங்க


Maheesh
ஜூலை 12, 2024 22:47

தயவுசெய்து இவரை யாரும் பப்பு என்று கேவலமாக பேசாதீர்கள்.


தமிழ்வேள்
ஜூலை 12, 2024 20:03

பையனுக்கு பட்டாயா நினைப்பு வந்துடிச்சு டோய்....


Kumar
ஜூலை 12, 2024 19:27

விமர்சிப்பதே இந்த கோமாளி தான்


M S RAGHUNATHAN
ஜூலை 12, 2024 18:50

இத்தாலியின் சாத்தான் வேதம் ஓதுகிறது


பேசும் தமிழன்
ஜூலை 12, 2024 18:44

அடுத்தவர்களை தவறாக பேசுவது எல்லாம்... பப்பு நீங்கள் தான்.... தனக்கு தானே அறிவுரை சொல்லி கொள்ள வேண்டியது தான்.


Sundar R
ஜூலை 12, 2024 17:36

அறிவிலான் தெளிதலும் தெளிந்தான் ஐயுறுதலும் தீரா இடும்பை தரும்


Anand
ஜூலை 12, 2024 17:26

மற்றவர்களை விமர்சிப்பதில் காங்கிரஸில் நம்பர் ஒன் இவர் தான்,


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை