உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மாற்றத்தில் ரகசிய ஒப்பந்தம்: உடைத்துச் சொன்னார் கர்நாடகா துணை முதல்வர்

முதல்வர் மாற்றத்தில் ரகசிய ஒப்பந்தம்: உடைத்துச் சொன்னார் கர்நாடகா துணை முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ''முதல்வர் மாற்றம் குறித்து பொது வெளியில் பேச விரும்பவில்லை. இந்த விவகாரம், எங்களில் ஒரு சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம்,'' என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறி உள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. அண்மையில் டில்லி சென்ற சிவகுமார் ஆதரவாளர்கள், முதல்வர் மாற்றம் குறித்து கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r8789a2u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருவருக்கும் இடையே ஆட்சி அதிகாரம் தொடர்பாக மோதல் வலுத்து வரும் சூழலில், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், மேலிடம் வழங்கும் வழிகாட்டுதல்படி நடப்பேன், இந்த பிரச்னைக்கு கட்சி தலைமை தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார். இந் நிலையில், கர்நாடகாவில் நடந்து வரும் குழப்பம் குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதாவது; முதல்வர் மாற்றம் குறித்து நான் பகிரங்கமாக, பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை. என்னை முதல்வராக்க நான் கேட்கவில்லை. ஏன் எனில், இது எங்களில் சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம். நான் மனசாட்சியை நம்புகிறேன். கட்சியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்த விரும்பவில்லை. கட்சி இருக்குமிடத்தில் நாங்கள் அனைவரும் இருப்போம்.இவ்வாறு டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
நவ 25, 2025 22:17

முதல்வர் மாற்றத்தில் ரகசிய ஒப்பந்தம்: உடைத்துச் சொன்னார் கர்நாடகா துணை முதல்வர். ரகசியம் என்ன வேண்டிக்கிடக்கிறது. ? நீருபூத்த நெருப்பாய் புழுங்கிக்கொண்டிருக்கிறார்.


நிக்கோல்தாம்சன்
நவ 25, 2025 21:24

மாநிலத்தை அதல பாதாளத்தில் தள்ளுவது எப்படி


M Ramachandran
நவ 25, 2025 20:42

ஏக் தின் கா சுல் தான்.


தாமரை மலர்கிறது
நவ 25, 2025 20:35

கர்நாடகாவில் ஜெயித்து கொடுத்த சிவகுமார் முதல்வர் ஆவதற்கு ஒருபோதும் சோனியா ஒத்துக்கொள்ள மாட்டார். அப்படி ஆகிவிட்டால், ஒருநாள் சிவகுமார் ராகுலுக்கு போட்டியாளர் ஆகிவிடுவார். அதனால் ஜெயிக்க திறமை இல்லாதவர்களுக்கு தான் காங்கிரஸ் இல் முதல்வர் பதவி கிடைக்கும். அந்த வகையில் சித்தராமையா தான் தொடார்ந்து கட்சியை காலிப்பண்ணுவார். வாரிசுக்கு எதிராக மக்கள் செல்வாக்குள்ள யாருக்கும் பதவி கூடாது என்பது தான் காங்கிரஸ் இன் ஒரே ஒரு கொள்கை. காங்கிரஸ் கட்சி இனியும் வளரும்னு உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பிஜேபிக்கு வருவது நல்லது.


Sowdarpatti Rayarpadi Ramaswamy
நவ 25, 2025 21:45

அப்படி காங்கிரெஸ்க்காரர்கள் பிஜேபிக்கு வந்தால் பிஜேபியும் காங்கிரஸ் கூடாரம் ஆகி ஊழல் மலிந்து பிஜேபியும் கெடும்


சாமானியன்
நவ 25, 2025 20:08

ஏதோ ஒரு பெரிய தொகை கைமாறுது. இதுதான் அந்த ரகசியம். எப்படி, எங்கே யாரால் கேட்கக்கூடாது.


தமிழ்வேள்
நவ 25, 2025 19:41

கட்சி ஐசியூ வில் உள்ளது... அப்போது இவரும் அங்கே இருப்பாரா? மூழ்கும் கப்பலில் எவனும் உடும்பு பிடியாக உட்கார மாட்டான்..


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி