உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: மத்திய அரசுக்கு மோகன் பகவத் வலியுறுத்தல்

வங்கதேச ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: மத்திய அரசுக்கு மோகன் பகவத் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: ''அண்டை நாட்டில் (வங்கதேசம்) ஹிந்துக்களான சிறுபான்மையின மக்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.வங்கதேசம் முழுவதும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறையாளர்கள், ஹிந்துக்கள், அவர்களின் வீடுகள், சொத்துகள், கோயில்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இது ஹிந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஹிந்துக்கள் டாகாவில் ஒன்று கூடி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலத்தில் தேசிய தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வருங்கால தலைமுறைக்கு சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. எப்போதும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் மக்கள் உள்ளனர். எனவே நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.மற்றவர்களுக்கு உதவும் பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. அண்டை நாட்டில் (வங்கதேசம்) ஹிந்துக்களான சிறுபான்மையின மக்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 15, 2024 20:26

கூடவே தமிழகத்தில் வாழும் ஹிந்துக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள் ப்ளீஸ்.


Palanisamy T
ஆக 15, 2024 16:29

ஹிந்துக்களின் பாதுகாப்பினை உறுதிச் செய்யவா? கட்டுப்பாடற்ற போராட்டக் காரர்களால் நடத்தப்படும் இவ்வன்முறைச் செயல்களால் எதைக் கேட்ப தென்பதற்கு குறைந்தப் பட்ச அறிவாவது நமக்கு வேண்டமா அன்று கிழக்குப் பாகிஸ்தான். இன்று வங்கதேசம். அதை பெற்றுக் கொடுத்தது இந்திய நாடு அமெரிக்க வல்லரசையும் மீறி அன்று எவனாலும் ஒருத் துரும்பைக் கூட நகர்த்த முடியாது . இத்தனைக்கும் பாகிஸ்தான் அமெரிக்கா வின் நட்பு நாடு. அன்று மட்டும் இந்திய நாட்டின் உதவியிருந்திராவிட்டால் இன்று வங்கதேசம் இல்லை. அன்று கிழக்குப் பாகிஸ்தானில் நடந்தது இனப் படு கோலை அமெரிக்கா கண்டித்திருக்க வேண்டும். மேலும் இந்தியாவின் உதவி யோடு புதிய நாடு வங்கத்தேசம் மலர்ந்தது இன்று வங்கதேசத்தில் போராட்டக்காரர் களால் நடத்தப் படுவது இந்தியாவிற்கு அவர்கள் செய்யும் நன்றிக் கடன். பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி