உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாசுகி பாம்பின் படிமங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

வாசுகி பாம்பின் படிமங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

புதுடில்லி: குஜராத்தில் 2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள், 47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, 'வாசுகி' இன பாம்பைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் அருகே, 2005ம் ஆண்டு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மிக நீளமான உருவ அமைப்புடன் கூடிய படிமப் பொருள் ஒன்றை கண்டறிந்தனர். அது, முதலை இனமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர்.எனினும், அந்த படிமப்பொருள் தொடர்பாக உத்தரகண்டில் உள்ள ஐ.ஐ.டி., ரூர்க்கியைச் சேர்ந்த டெபாஜித் தத்தா, சுனில் பாஜ்பாய் ஆகிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களது ஆய்வுக் கட்டுரை, 'ஜர்னல் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்ற அறிவியல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக் கட்டுரையில், 'கடந்த 2023ல் கட்ச் பகுதியில் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருளில், 27 பாகங்களின் எலும்புகளை ஆய்வு செய்தபோது, அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தது. அது, மிக நீளமான பாம்பு இனத்தைச் சேர்ந்தது.'குறிப்பாக, இது, பழங்காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்பட்ட வாசுகி பாம்பு இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்' என தெரிவித்துள்ளனர். 'இதன் நீளம் 36 அடி முதல் 50 அடி வரை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட மற்றும் உருளை வடிவமாக இந்த பாம்பு இருந்திருக்கும்.'முழுமையான எலும்புக்கூடு இல்லாததால், இந்த பாம்பின் மொத்த நீளம் எவ்வளவு என்பதை கண்டறிய முடியவில்லை' என, விஞ்ஞானிகள்தங்கள் ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.இதற்கு முன், தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் நடந்த புதை படிவ ஆராய்ச்சியில், அழிந்துபோன உயிரினமான டைட்டானோபோவா என்ற மிகப்பெரிய பாம்பு இனத்தின் முழு உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன. பாம்பின் நீளம் 43 அடியாக இருந்தது. வாசுகி பாம்பு, புராணங்களில் நாகங்களின் அரசனாக திகழ்ந்ததாகவும், 50 அடி வரை வளரக்கூடியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மு.செந்தமிழன்
ஏப் 20, 2024 22:21

அதெல்லாம் முடியாது நான் அமெரிக்காகாரன் சொன்ன தான் நம்புவேன் அவன் அங்க பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை.


enkeyem
ஏப் 20, 2024 15:29

விஞ்சானிகள் சொல்வதெல்லாம் பிதற்றல்கள் அப்படித்தானே


கனோஜ் ஆங்ரே
ஏப் 20, 2024 12:56

என்னென்ன சொல்றாங்க பாருங்க.....கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க?


VT Tech Tamil
ஏப் 20, 2024 12:29

மக்களுக்கு கடவுள் பக்தி இருக்குன்றதுக்காக இப்படியெல்லாம் கதை கட்டி மக்களை முட்டாளாக்காதீங்க


அப்புசாமி
ஏப் 20, 2024 11:24

சரிதான்.


Rajarajan
ஏப் 20, 2024 11:15

இது சரியா இல்லையா என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதை விட, ராமாசாமி ஆதரவாளர்கள் சொல்வதே ஏற்றுக்கொள்ள முடியும் எப்படி ?? சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பிராமணர் மற்றவரை அடக்கி ஆண்டனர் என்று, அருகிலிருந்து பார்த்தது போல் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளும்போது, இதையும் அவர்கள் சொல்வதை தான் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்வர் ஏனெனில், ராமசாமி ஆதரவாளர்கள் தான் தலைசிறந்த ஜானிகள் தங்கள் முக்காலமும் அறியும் திறன் பெற்றவர்கள்


S.Govindarajan.
ஏப் 20, 2024 10:48

இதையே வெளிநாட்டுக்காரன் சொன்னால் நம்புவோம்நம் நாட்டுக்காரன் சொன்னால் பொய் என்போம்


Sampath Kumar
ஏப் 20, 2024 09:52

இது pontra வரலாற்று சான்றுகளில் கடுரியும் தன்மையில் பல் வேறு குளங்கள் உள்ளது இந்த செய்தி படி குஜராத்தில் தான்கடல் கட்டிய பட்டது


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 20, 2024 08:00

நாங்களே ஊரை நம்ப வைக்க முயற்சி செய்கிறோம்.


Kasimani Baskaran
ஏப் 20, 2024 07:41

பெரிய சைஸ் பாம்பு, டைனோசார் போன்றவை இருந்ததை யாரும் மறுக்கவில்லை அதற்காக அதை வாசுகி என்று பெயர் வைப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்


வலங்கை
ஏப் 20, 2024 10:24

ஆமாம், சந்திரமுகி என வைத்திருக்கலாம்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ