உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ரூ.2 கோடி கஞ்சா எண்ணெய் பறிமுதல் கேரளாவில் நால்வர் கைது

 ரூ.2 கோடி கஞ்சா எண்ணெய் பறிமுதல் கேரளாவில் நால்வர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கும்பல் தங்கி இருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் தங்கி இருந்த பெண் உட்பட இருவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமர முதலி 35, சுனமணி 37 என்பது தெரியவந்தது. இந்த எண்ணெயை வாங்க வந்த கொச்சியை சேர்ந்த அஸ்வின் ஜோய் 32, ஸ்ரீராஜ் 37 ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா எண்ணெய் மதிப்பு சர்வதேச சந்தையில் இரண்டு கோடி ரூபாய் இருக்கும் என்று கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கும்பல் இதற்கு முன்னரும் ஒடிசாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை