உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோபி மஞ்சூரியன் விற்றால் கடைக்கு சீல் தங்கவயல் அதிகாரிகள் எச்சரிக்கை

கோபி மஞ்சூரியன் விற்றால் கடைக்கு சீல் தங்கவயல் அதிகாரிகள் எச்சரிக்கை

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும், 'ரோட்டமைன் பி' என்ற ரசாயனம் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கர்நாடகாவில் அதன் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்று ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கவயலில் விற்பனை செய்யப்பட்ட கோபி மஞ்சூரியன், சிவப்பு கலரிலான பஞ்சு மிட்டாய், சிக்கன் கபாப் ஆகியவற்றின் மாதிரிகளை, உணவு பாதுகாப்புத் துறையினர் சேகரித்து பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனையில், உடலுக்கு கெடுதியை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே, இதன் விற்பனைக்கு தடை விதிக்குமாறு தங்கவயல் தாசில்தார், நகராட்சி ஆணையர், தாலுகா சுகாதார நலத்துறை ஆகியோருக்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.நகராட்சி ஆணையர் பவன் குமார்: உடலை பாதிக்கும் உணவு வகைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது. கோபி மஞ்சூரியன், சிக்கன் கபாப் ஆகியவற்றில் சிவப்பு நிற ரசாயனம் கலக்கப்படுகிறது. இதனால் சுவையை கூட்டலாம்; பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் இருக்கும்.இதனால் ஏற்படும் பின்விளைவுகளை கவனிக்க தவறுகிறோம். இந்த உணவுப் பொருட்களில் 'ரோட்டமைன் -பி' கலந்து, உணவு நிறத்தை சிவப்பாக மாற்றுகிறது. இதனால் உயிரைக் கொல்லும் புற்றுநோய் உண்டாகும் என்று மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.இத்துடன் சிற்றுண்டி விற்பனை செய்யும் சிறிய உணவு விடுதிகளில், வாழை இலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தவறு. யாரேனும் பிளாஸ்டிக் காகிதங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதம் விதிக்கப்படும்.தங்கவயல் தாலுகா சுகாதார நலத்துறை அதிகாரி பத்மாவதி: அரசு உத்தரவுப்படி சிவப்பு நிற பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது.தங்கவயல் தாசில்தார் ராம லட்சுமையா: கர்நாடக அரசு உத்தரவுப்படி, சிவப்பு பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், அசைவ உணவு வகையான சிக்கன் கபாப் ஆகியவற்றில், உடலுக்கு கெடுதியை ஏற்படுத்தும் ரசாயனம் உள்ளது. இதனை யாரும் விற்கக் கூடாது. அரசின் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்.பத்மாவதி, பவன் குமார், ராம லட்சுமையாசரவணன், தாமஸ், செல்வி, ஜனார்த்தனன், லட்சுமம்மாபடங்கள் உண்டுசுண்டி இழுப்பதில் ஆபத்து!சிவப்பு வண்ணத்தில் நம்மை சுண்டி இழுக்கும் கோபி மஞ்சூரியன், சிக்கன் கபாப் ஆகியவற்றை வாங்கும்போது, பலரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வாடிக்கையாளர்களும், விற்பனையாளர்களும் இதை தவிர்க்க வேண்டும்.எம்.தாமஸ், ஆண்டர்சன் பேட்டைதேவை விழிப்புணர்வு!எதை எதை சாப்பிடலாம், எவற்றை ஒதுக்கலாம்னு சுகாதாரத் துறையினர், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவில் பல விதமான எண்ணெய் பயன்படுத்துவதால் கொழுப்பு சக்தி அதிகரிக்கிறது. பின்விளைவுகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். சிவப்பு நிறமாக இருப்பதால் கோபி மஞ்சூரியன், கபாப் ஆகியவை நம்மை ஈர்க்கின்றன. இதில், இத்தனை கோளாறு இருக்கிறதா, வேண்டவே வேண்டாம்.என். சரவணன், எஸ்.டி.பிளாக், உரிகம்.'ஹோம்லி புட்' பெஸ்ட்!ஆரோக்கியமாக வாழ மருத்துவர் ஆலோசனைப்படி தான் உணவுகள் உட்கொள்ள வேண்டும். 50 வயது கடந்தவர்கள், 'மாத்திரை பெட்டிகள்' வைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. கோபி மஞ்சூரியன் உட்பட வடமாநில கலாசாரத்தில் 'பாஸ்ட் புட்' விற்பனை அதிகரித்துள்ளது. வியாபாரிகளுக்கு வர்த்தக ரீதியாக லாபம் கொடுத்தாலும், வாடிக்கையாளர்கள் காசு கொடுத்து நோயை வாங்க வேண்டுமா? 'ஹோம்லி புட்' பெஸ்ட். சிகப்பு நிறத்தில் டேஞ்சர் உள்ளது.ஆர்.ஜனார்த்தனன், டாப் லைன் குடியிருப்பு.நினைக்கும்போது பயம்!சுவையான உணவுகளை, வீட்டில் சமைத்தாலும், இப்போதைய இளசுகள் பளபளக்கும் பல வகை உணவுகளை தேடுகின்றனர். இவர்களுக்கு புத்தி சொல்லி திருத்த வேண்டும். வீடுகளில் சமைக்கிற 'கபாப்'களிலும் கூட, சிவப்பு மசாலா சேர்ப்பதை தவிர்ப்பேன். கண்ணுக்கு தெரியாத பல விதமான நோய்கள் உருவாவதை நினைக்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது.லட்சுமியம்மா, பாரண்டஹள்ளி, ராபர்ட்சன்பேட்டைவிதிமுறை நல்லது!பஞ்சு மிட்டாயை தமிழகத்தில் தடை செய்தபோதே நாடு முழுதும் தடை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது கர்நாடகாவும் தடை செய்துள்ளதை வரவேற்கிறேன். சிக்கன் கபாப், கோபி மஞ்சூரியன் உணவிலும் சிவப்பு நிற கெமிக்கல் கலக்காமல், அதன் ஒரிஜினல் மாறாதபடி செய்து விற்பனை செய்ய தடை ஒன்றும் இல்லை. விதிமுறை என்ன கூறுகிறதோ, அதன்படி நடந்து கொள்வது நல்லது.- செல்வி, மாரிகுப்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி