உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் குய்யோ முய்யோன்னு கதறல்

உ.பி.,யில் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் குய்யோ முய்யோன்னு கதறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வரும் அரசு ஊழியர்கள் 2.5 லட்சம் பேரின் சம்பளம் நிறுத்திவைக்கப்ட்டதால் உ.பி.,யில் பலர் அன்றாடம் பிழைப்பை ஓட்ட முடியாமல் கையை பிசைய துவங்கி உள்ளனர்.

சொத்தை காட்டுங்கப்பா ., சம்பளம் தர்றோம்

உ .பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அரசு ஊழியர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், பொதுத்துறை அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என தங்களின் சொத்து விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் , தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு இந்த பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மனவ் சம்பத்தா என்ற போர்ட்லில் இதுவரை 71 சதவீதம் பேர் தங்களின் விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். பல முறை எச்சரித்தும் ஏனையோர் அரசு உத்தரவை மதிக்காமல் இருந்து வந்தனர். இதனையடுத்து சொத்து விவரம் தாக்கல் செய்யாத அரசு ஊழியர்கள் 2,44,565 பேரின் சம்பளத்தை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R.RAMACHANDRAN
செப் 04, 2024 08:53

அரசு ழியர்கள் நேர்மையாக கடமைகளை செய்யாமல் லஞ்சம் வழங்குவோர்களுக்கு மட்டுமே சேவை செய்து கணக்கில் காட்டாத சொத்துக்களை சேர்த்து வைத்துளோர்களை சொத்துக்களை பறிமுதல் செய்துகொண்டு பணியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.


Sudha Sudharsan
செப் 03, 2024 17:17

Great move.


குடந்தை செல்வகுமார்
செப் 03, 2024 15:40

இது பாஜகவின் ஓட்டுவங்கியை பாதிக்கும்


kulandai kannan
செப் 03, 2024 14:30

தமிழ்நாட்டில் கண்டிப்பாக திமுக, சீமான், ஜால்ரா மீடியாக்கள் எதிர்ப்பார்கள்.


தஞ்சை மன்னர்
செப் 03, 2024 13:46

"" ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் , தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு "" இவர்களின் விவரம் வாங்க வேண்டும் அரசு சம்பளம் பத்து என்று கிம்பளமும் இவர்களுக்கு உண்டு


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 13:41

திமுகவின் கொத்தடிமைகள் இதற்காக கருத்திடவில்லையே ????


பாமரன்
செப் 03, 2024 12:50

உபி அரசின் இந்த முடிவு மிகவும் சரியானது... அந்த விடுபட்ட பிரிவினரையும் சேர்க்கணும்... மற்ற மாநிலங்களிலும் இதை கட்டாயம் அமல்படுத்தனும்... ஆக்சுவலா இந்த விதி அரசு ஊழியர்களின் ரூல் புக்கில் இருப்பதுதான்... லஞ்சம் வாங்கக்கூடாதுன்னு இருக்கும் கண்டிஷன் மாதிரின்னு யாரும் சீரியஸா எடுத்துக்கறதில்லை... பக்கோடாஸ் திருப்திக்காக சொல்றேன்... திராவிட மாடல் அரசும் இதை செயல்படுத்தனும்... அப்பாடா டீம்காக்காரன்னு திட்ட மாட்டாய்ங்க...


RAAJ68
செப் 03, 2024 12:27

இப்படி எல்லாம் செய்தால் அடுத்த முறை பிஜேபி ஆட்சிக்கு வராது. முதலில் உங்கள் மந்திரி சபையில் உள்ளவர்களின் சொத்துக்கள் விவரத்தை சமர்ப்பிக்க சொல்லவும்.


Ramesh Sargam
செப் 03, 2024 12:17

சரியான முதல்வர். முதல்வர்கள் இப்படி பணியாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டு ஊழல் செய்பவர்களுக்கு ஒத்துப்போகும் முதல்வர்கள்தான் மற்றமாநிலங்களில். அப்படி இருந்தால் அந்த மாநிலங்கள் எப்படி முன்னேறும்? நாடு எப்படி முன்னேறும்?


Venkataraman
செப் 03, 2024 12:09

இதே போல தமிழக அரசு ஊழியர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும். இதில் ஏராளமான ஊழியர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சிக்குவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை