உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17 லட்சம் வெள்ளி பொருட்களுக்கு ஹால் மார்க் முத்திரை : அமைச்சர் ஜோஷி

17 லட்சம் வெள்ளி பொருட்களுக்கு ஹால் மார்க் முத்திரை : அமைச்சர் ஜோஷி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ஹால் மார்க் முத்திரை அமல்படுத்தப்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களிலேயே 17 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து இருப்பதாவது: தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு முறையே பிஸ் (BIS) மற்றும் ஆறு இலக்க எண்களுடன் ஹால் மார்க் (HUID) முத்திரையும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து வெள்ளி பொருட்களுக்கு ஹால் மார்க் முத்திரை பதிப்பதில் நாட்டின் தெற்கு பகுதி முதலிடத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இடம் பிடித்துள்ளது என்றார்.மேலும் அவர் கூறுகையில் வெள்ளி நகைகளில் ஹால் மார்க் முத்திரையிடுவதன் மூலம் நகையின் தூய்மையை வெளிப்படுத்துவதிலும் , போலிகளை தடுப்பதிலும் குறிப்பிடத்தக்கநிலையை எட்டி உள்ளது.ஆறு இலக்க அடையாள குறியீடு முழுமையான டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் நுகர்வோர்களின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது என்றார். கடந்த செப்., மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது முதல் மூன்று கால கட்டத்திற்குள் சுமார் 17.35 லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளி நகை பொருட்களுக்கு ஹால் மார்க் செய்யப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ