உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துன்புறுத்துது சி.பி.ஐ.,: ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு

துன்புறுத்துது சி.பி.ஐ.,: ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை மோசடி வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நேரடியாக முதல்வர் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் இருந்த நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இதனை எதிர்த்து அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து பதிலளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், சி.பி.ஐ., வழக்கில் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் நேரடியாக கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது: மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையில் தன்னை சி.பி.ஐ., தொடர்ந்து துன்புறுத்துகிறது. இது கவலைக்குரிய விஷயம். சி.பி.ஐ., விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் நீட்டிப்பு

இந்நிலையில், இந்த மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ., நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raghavan
ஜூலை 03, 2024 23:18

செய்தது என்னவோ மகா பெரிய ஊழல் இதில் இவரை கொஞ்சி கொஞ்சி விஜாரனை செய்யவேண்டுமாம். நீயும் இந்த நாட்டின் பிரஜை தான். எல்லோரையும் எப்படி விஜாரிப்பார்களோ அப்படித் தான் விஜாரிப்பார்கள். சாதாரண பிரஜை உடனே செய்ததை சொல்லி விடுவான். நீ ஒரு மலை முழுங்கி மஹாதேவன் உன்னிடம் மயிலே மயிலே என்றல் இறகு போடுமா. நீயே ஒரு சிபிஐ அதிகாரியாக இருந்தால் முறைப்படிதானே விஜாரிப்பாய்.


C.SRIRAM
ஜூலை 03, 2024 22:04

பொய் சொல்கிறான் ஊழல் வாதி


தமிழ்வேள்
ஜூலை 03, 2024 20:26

இவருடைய IRS சர்வீஸ் பென்ஷனை ரத்து செய்து விட வேண்டும்...


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜூலை 03, 2024 19:58

டீச்சர் இவன் என்னை கிள்ளி கிள்ளி வைக்கிறான் டீச்சர் அதனால என்னை வேற கிளாஸூக்கு மாத்தி விடுங்க டீச்சர்.


Pandi Muni
ஜூலை 03, 2024 19:14

வாய வெட்டாம வச்சிருக்கானுங்களே அதுக்கே இவர் சந்தோசப்பட்டுக்கணும்


rama adhavan
ஜூலை 03, 2024 19:13

எந்த வகையான துன்புறுதல் என்று சொல்லவில்லையே?


தாமரை மலர்கிறது
ஜூலை 03, 2024 18:22

திருடினால் போலீஸ் துன்புறுத்தும்தான்.


Swaminathan L
ஜூலை 03, 2024 18:13

கேள்விகள் கேட்டு அல்லது ஆதாரங்களுடன் மடக்கி விசாரித்தால் அது துன்புறுத்தல் ஆகுமா என்ன? முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக இவரும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, பதில்கள் தராமல் நேரத்தைக் கடத்துகிறார் என்று சிபிஐயும் பரஸ்பரம் புகார் சொல்வது விந்தையல்ல. நூறு கோடி பணம் எங்கே? ஏன் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்கத் தான் முடிகிறது. ஊழல் எதுவும் நடக்கவில்லை, யாரும் ஒரு காசு கூட கையூட்டுப் பெறவில்லை என்று சொல்ல முடியவில்லையே.


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி