உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் ஹேமந்த் சோரன் புகார்

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் ஹேமந்த் சோரன் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, முதல்வர் ஹேமந்த் சோரன் அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநில சமூக நலத்துறை இயக்குனரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறையினர், அவருக்கு ஏழு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.புதுடில்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில், அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது சோரன் வீட்டில் இல்லை. மொத்தம், 13 மணி நேரம் அவரது வீட்டில் இருந்த அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ.,- எஸ்.யு.வி., ரக கார் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கடந்த 24 மணி நேரமாக எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் தலைமறைவாக இருந்த சோரன், நேற்று ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பினார்.இந்நிலையில், இன்று ராஞ்சியில் உள்ள வீட்டில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, அவரது வீட்டின் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதனிடையே, ராஞ்சியில் உள்ள துருவா போலீஸ் ஸ்டேசனில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி ஹேமந்த் சோரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramesh Sargam
பிப் 01, 2024 00:04

தப்பு செய்யவில்லை என்று கூறும் இவன் ஏன் பின்னர் தலைமறைவானான்?


K.Ramakrishnan
ஜன 31, 2024 22:04

அமலாக்கத்துறை இப்படி ஆடக்கூடாது. அமலாக்கத்துறை யோக்கியமான துறை என்றால், அத்தனை அரசியல்வாதிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். ரெய்டு போக வேண்டும். எந்த கட்சி யோக்கியமான கட்சி? சொல்லு ங்கள்.. சாதாரண ஊராட்சி கவுன்சிலரே சொத்து குவிக்கிறாரு. அப்படி இருக்கும் போது எல்லா மந்திரிகள்,எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வீடுகளிலும்ரெய்டு நடத்தலாமே.. ஏன் போகவில்லை. ஆளும் கட்சி பா.ஜனதாவில் அத்தனை பேருமே யோக்கியர்களா? பா.ஜனதா ஆளுகிற மாநிலங்களில் அயோக்கியர்கள் யாருமே கிடையாதா? அங்கெல்லாம் போகாத அமலாக்கத்துறை, எதிர்க்கட்சிகள் மீது மட்டும் பாய்வது தான... உங்கள் நேர்மையை சந்தேகிக்கிறது. உங்கள்மீது சோரன் புகார் கொடுத்தது ஒன்றும் தப்பில்லை. எதிர்க்கட்சி முதல்வர் தானே என்று நீங்கள் ஏசினாலும் ஏசி இருப்பீர்கள்? உங்களின் யோக்கியதைக்கு அங்கித் திவாரி ஒருத்தர் போதாதா?


Duruvesan
ஜன 31, 2024 20:02

கட்டுஸ் திருட்டு ரயில் ஏறி வந்து ஊரான் காசு ஆட்டைய போட்டு உலக பணக்காரன் ஆனது எல்லோருக்கும் தெரியும், எவனாலயும் ஒன்னும் பண்ண முடியல...,முடியாது


jayvee
ஜன 31, 2024 19:48

திமுக ஆட்சியில் தீமுகவே பந்த் நடத்திய கூத்துதான் நினைவுக்கு வருகிறது ..


Kasimani Baskaran
ஜன 31, 2024 18:50

இது போன்ற குப்பைகளை உள்ளே தூக்கி வைப்பதை விட்டுவிட்டு ஆட்டம்போட விடுவது தவறான முன்னுதாரணம்.


Duruvesan
ஜன 31, 2024 18:48

கெஜ்ரி, சோறான், மருமவன், கனி, ராஜா, ராவுள், DKS, அபிஷேக், தேஜாஸ்வி, கவிதா, எடப்பாடி,இவங்க எல்லோருக்கும் 2024 ஜூலை அப்புறம் ரொம்ப கெட்ட நேரம்


Munish
ஜன 31, 2024 17:52

போலீஸ் போலீஸ் ஈ.டி யையும் எப்ஐஆர் போட்ட போலீஸையும் புடிச்சு உள்ள போடுங்க என புகார் தருவாரோ?


DVRR
ஜன 31, 2024 17:39

ஊழல் என்பது ஒரு கை தேர்ந்த கலை எல்லா அரசிய்ல் வியாதிகளுக்கும் அதுவும் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் என்னும் பட்சத்தில் அவர்கள் இன்னும் மிக தைக்க அளவில் அதை செய்ய வேண்டும் என்று எழுதாத சட்டம் சொல்வதால் இந்த அமலாக்காத்துறை அதிகாரிகள் எங்களை இப்படி சித்ரவதை செய்வது மிக மிக தவறானதாயு ஆகவே அவர்களை உடனே கைது செய்து மாநிலம் தண்டி கொண்டு விடவேண்டும் என்று அந்த புகாரில் எழுதப்பட்டிருக்கவேண்டும் அப்படித்தானே ஹே மந்(தி) சோர் (இந்தியில் திருடன்) அந்(த) ஹேமந்த் சோரன்


குமரன்
ஜன 31, 2024 17:37

இன்டியா கூட்டணியில் ஜனநாயகத்தை காப்பாற்றும் தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா ?


Anand
ஜன 31, 2024 17:15

என்னை ஏன் இப்படி சோதிக்கிறார்கள், எனக்கு உரிமை இல்லையா?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ