உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை ஹிந்து அறநிலையத்துறை உத்தரவு

அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை ஹிந்து அறநிலையத்துறை உத்தரவு

பெங்களூரு: கோவில்கள், மடங்கள், வழிபாட்டுத் தலங்களில் அரசியல் செயல்பாடுகளுக்கு, கர்நாடக ஹிந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.இதுகுறித்து, கர்நாடக ஹிந்து அறநிலையத்துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை:லோக்சபா தேர்தலை அமைதியான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும். எனவே ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்கள், மடங்கள், வழிபாடு தலங்கள், யாத்திரிகர்கள் விடுதி, திருமண மண்டபங்களில், அரசியல் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசியல் கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு, கோவிலின் அறைகள், திருமண மண்டபங்கள், சமுதாய பவன், காலியிடங்கள், கோவில் வளாகங்களில் அனுமதியில்லை. கோவில் வளாகங்களில் அரசியல் பிரமுகர்கள், விருந்து ஏற்பாடு செய்யக் கூடாது. கோவிலின் ஒலிபெருக்கிகளை, அரசியல் சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்