| ADDED : ஜன 26, 2024 07:08 AM
பெங்களூரு; தொடர் விடுமுறையால், பெங்களூரில் இருந்து, வெவ்வேறு நகரங்களுக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது.தொடர் விடுமுறை வந்தால், பெங்களூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகம். இந்த வாய்ப்பை, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வர்.அந்த வகையில், குடியரசு தினம், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ஏற்கனவே தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தி வசூலித்தனர். மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் நேற்று மாலை பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், பெங்களூரு - ஷிவமொகாவுக்கு சாதாரண நாட்களில், 450 - 600 ரூபாய் வசூலிக்கப்படும். நேற்றைய நிலவரப்படி, 1,250 - 1,600 வரை வசூலிக்கப்பட்டது. இது போன்று பெங்களூரில் இருந்து, வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது, பயணியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.