உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுனிதாவின் ‛‛ரிட்டர்ன்; நாசாவுக்கு மானம் போச்சு; போயிங்குக்கு பணம் போச்சு!

சுனிதாவின் ‛‛ரிட்டர்ன்; நாசாவுக்கு மானம் போச்சு; போயிங்குக்கு பணம் போச்சு!

புதுடில்லி: தொழில்நுட்ப காரணங்களால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாசாவிடம் பயண ஒப்பந்தம் பெற்று, விண்கலம் அனுப்பிய போயிங் நிறுவனத்துக்கு ரூ.1,049 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 58, புட்ச் வில்மோர், 61, ஆகியோர் ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.

50 நாட்களுக்கு மேல்!

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். திரும்பி வருவதற்கான ஏற்பாடுகள் செய்தபோது, விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. திட்டமிட்டபடி, ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். கோளாறை சரி செய்ய முடியாத நிலையில், இருவரும் பூமிக்கு திரும்புவது ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இருவரும் 50 நாட்களுக்கு மேல் விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளனர்.

நஷ்டம்

இதனால் நாசாவிடம் பயண ஒப்பந்தம் பெற்று, விண்கலம் அனுப்பிய போயிங் நிறுவனத்துக்கு ரூ.1,049 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் சுனிதா வில்லியம்சிற்கு எடையிழப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு போன்ற பிரச்னைகள் நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sampath Kumar
ஆக 08, 2024 09:55

இதுல ஹிந்தியவிருக்கு என்ன போச்சு? சொல்ல முடியமா?


Natarajan Ramanathan
ஆக 08, 2024 00:16

அதிக நாட்கள் விண்வெளியில் இருப்பதால் சென்ற இருவருக்குமே உடல் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் உடன் சென்ற புட்ச் வில்மோர், 61, பற்றி எந்த தகவலும் இல்லாமல் சுனிதா வில்லியம்சை பற்றி மட்டுமே கவலைப்படுவது அசிங்கமாக இல்லையா?


Ramesh Sargam
ஆக 07, 2024 19:48

இந்த பிரச்சினையை பற்றி விவாதிப்பதைவிட்டு, அமெரிக்க அரசு, நாசா அதிகாரிகள் விண்வெளியில் சிக்கிக்கொண்ட அந்த இருவரையும் எப்படியாவது பூமிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பொழுது அவர்கள் உயிர்தான் முக்கியம். மானம், நஷ்டம் பற்றி பிறகு பேசலாம்.


தாமரை மலர்கிறது
ஆக 07, 2024 19:03

வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதும், அங்கிருந்து பூமிக்கு அழைத்துவருவதும் ரசியாவின் வேலையாக இதுநாள் வரை இருந்தது. உக்ரைன் போரால், அமெரிக்கா ரசியாவை புறக்கணித்து, தானே குறுகிய காலத்தில் செயல்பட்டதால் விளைவு இன்று சுனிதா சுணக்கம். மற்ற நாடுகளை துச்சமாக நினைத்து, தான் மட்டுமே ராஜா என்று நினைத்ததன் விளைவு தான் இந்த பின்னடைவு.


Iniyan
ஆக 07, 2024 18:31

இங்கே பல விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து சொல்கிறார்கள். இதை படிக்கும்போது புல்லரிக்குது.


Senthoora
ஆக 07, 2024 18:28

1049 போயிங் நிறுவனத்துக்கு ஜுஜுபி, அடுத்த 10 போயிங் விமான விட்பனையில் சமாளித்துவிடுவாங்க. பாதிக்கப்படப்போவது உல்லாசப்பயணிகள். எப்புடி?


subramanian
ஆக 07, 2024 18:11

அவர்கள் ஆராய்ச்சி முடிந்தது, ஆராய்ச்சியின் பலன் நாசாவிற்கு கிடைத்துவிட்டது . அனைத்து தகவல்களையும் சேகரித்து விட்டனர். இனிமேல் அந்த இரண்டு பேரையும் கை விட எல்லாம் செய்வார்கள்.


Senthoora
ஆக 07, 2024 18:29

இந்த தங்கம், போதைவஸ்து கடத்தல்காரர் மாதிரியா?


P. VENKATESH RAJA
ஆக 07, 2024 17:54

நாசா நிறுவனம் கவனமாக செயல்பட்டு இருக்க வேண்டும்


மேலும் செய்திகள்



புதிய வீடியோ