உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொள்ளையடிக்க கோர்ஸ் நடத்துறாங்கப்பு.. ரூ.3 லட்சம் பீஸ்..! ம.பி.யில் வினோத கிராமங்கள்

கொள்ளையடிக்க கோர்ஸ் நடத்துறாங்கப்பு.. ரூ.3 லட்சம் பீஸ்..! ம.பி.யில் வினோத கிராமங்கள்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களில், சிறார்களுக்கு கொள்ளைடிக்க ரூ. 3 லட்சம் கட்டணத்தில் பயிற்சி அளிப்பது அம்பலமாகியுள்ளது.

பயிற்சி

நுழைவுத்தேர்வில் வெல்ல பயிற்சி, வேலைக்கான நேர்முகத் தேர்வில் பயிற்சி என எவ்வளவோ விஷயங்களை பார்த்து இருப்போம். ஆனால் கொள்ளையடிக்க கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப்பிரதேச மாநிலத்தில் தான் அப்படி ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சிறு வித்தியாசம்... எப்படி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்கு தான் இங்கு பயிற்சி தரப்படுகிறது.

கிராமங்கள்

ராஜ்கர் மாவட்டத்தில் கடியா, குல்கேடி,ஹல்கேடி என்ற கிராமங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தலைநகர் போபாலில் இருந்து 117 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமங்களில் இந்த நிலை காணப்படுகிறது. 12 வயது சிறார்களுக்கு கொள்ளை, திருட்டு பயிற்சிகளை அவர்களது பெற்றோர்கள் அளிக்க ஏற்பாடு செய்கின்றனர்.

பயிற்சிக் கட்டணம்

பயிற்சிக்காக கைதேர்ந்த திருடர்கள், கொள்ளையர்கள் யார் உள்ளனர் என்பதை அறிந்து அவர்களிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணத்தை கட்டணமாக கொடுத்து பயிற்சிக்கு அனுப்புகின்றனர். அவர்களுக்கு பிக்பாக்கெட், செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, கூட்டமாக உள்ள விழாக்கள், கோயில்கள், திருமண நிகழ்வுகளில் எப்படி கொள்ளையடிப்பது என்பதை கற்றுத் தருகின்றனர்.

கைவரிசை

பயிற்சியும் கொடுத்து அவர்களை கொள்ளையடிக்க அனுப்பும் கொள்ளையர்கள், அதில் வரும் பணத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் வரை கொள்ளைடியத்து தந்த சிறார்களின் பெற்றோர்களுக்கு வெகுமதியாக தருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து அண்மையில் பயிற்சி பெற்ற ஒருவர் ஹைதராபாதில் தொழிலதிபர் இல்லத் திருமணத்தில் கைவரிசை காட்டி கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள். ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிச் சென்றிருக்கிறார்.

போலீசார் திணறல்

சம்பவத்தை கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு பணம், நகையுடன் சொந்த ஊரான கடியாவுக்கு எஸ்கேப் ஆகி உள்ளனர். பின்னர், அங்கிருந்து நேராக கன்வர் எனப்படும் சிவ யாத்திரையில் கலந்து கொண்டு, போலீசாரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

சவால்

சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று குற்றவாளிகளை பிடிக்கச் செல்வது போலீசாருக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. அன்னியர்கள் அல்லது காவல்துறை சம்பந்தப்பட்ட நபராக இருப்பின் அவர்களை செல்போன் கேமராவில் போட்டோ எடுத்து, ஊரில் உள்ள அனைவருக்கும் அனுப்பி உஷார்படுத்திவிடுகின்றனர். குறிப்பாக ஊருக்குள் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு தலையாய பணியாகவே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

கல்வியறிவு

300க்கும் மேற்பட்ட சிறார்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று திருட்டு, கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக கூறும் போலீசார், போதிய கல்வியறிவு இல்லாததே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ramesh Kumar
ஆக 22, 2024 10:16

தமிழ் நாடு


என்றும் இந்தியன்
ஆக 21, 2024 17:27

அப்படி பணம் கொடுக்க முடியாதவர்கள் உடனே டாஸ்மாக்கினாட்டுக்கு வந்து திருட்டு திராவிட கட்சியில் சேருங்கள் உங்களுக்கு இலவசமாக ஊழல் கொலை கொள்ளை பயிற்சி கொடுக்கப்படும்.


J.Isaac
ஆக 21, 2024 21:48

சரியான கோமாளி


பெரிய ராசு
ஆக 31, 2024 21:44

கோமாளி


Aroul
ஆக 21, 2024 13:33

எங்க ஊர்ல கொள்ளையடிக்க கட்சி நடத்துறாங்க. கோடி கோடியா கொள்ள போகுது.


Lion Drsekar
ஆக 21, 2024 13:24

வரும்காலங்களில் இது போன்ற படிப்புகளை பல்கலைக்கழங்களும் கண்டிப்பாக நடத்தும், உடலுக்கு தீங்கு செய்யும் சாராயத்தையே அரசே விற்கும்போது இது மட்டும் என்ன விதிவிலக்கு ,


Barakat Ali
ஆக 21, 2024 12:16

அங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லையா ????


Sampath Kumar
ஆக 21, 2024 09:39

இது போல தான் வட்டகன்ஸ் ஐ பி எஸ் , ஐ எ.எஸ் ,நீட் மற்றும் மத்திய ரசின் அணைத்து தேர்வுகளையும் தேர்வு மேற்பார்வை மள்ளர்களின் துணை உடன் பிட்டு மற்றும் புத்தகம் பார்த்து ஏழுத அனுமதிக்க படுகிறார்கள் என்ன ஒரு அநியாயம் பாருங்க வலித்தாழிகளில் இந்த கட்சி வைரலாக பரவி வருகிறது என்னடா வட்டகங்கள் மத்திய தேர்வில் பேரும் வெற்றி பெருகிறார்களே எப்படி ? என்று குழப்பத்துக்கு விடை கிடைத்தது இந்தமாதிரி திருட்டு குமுத்தி வேலைகளில் வடக்கன் தான் நும்பர் 1


ஆரூர் ரங்
ஆக 21, 2024 09:28

இங்க மட்டும் 1760000000000 ஆட்கள் இல்லையா? வடமாநிலங்களில் திருட்டுப் போனால் போலீஸ் திருடர்களைப் பிடிக்க திருச்சி அருகிலுள்ள ராம்ஜி நகர் பகுதியில்தான் தேடி வருகிறார்கள். நூறாண்டுகளுக்கும் முன் இங்கும் தேட்டை போடும் தீவட்டி கொள்ளை குற்றப் பரம்பரை இருந்தது. கேப்மாறிகள் எனும் பாரம்பரிய கும்பலை ஒழிக்க தமிழக போலீஸ் பெரும்பாடுபட்டது வரலாறு.


Velan Iyengaar
ஆக 21, 2024 10:41

இன்றைய தேதியில் 2G ஊழல் நிரூபிக்கப்படவில்லை ... குற்றம் சாட்டப்பட்ட லோரும் விடுதலையாகி உள்ளனர். bj கட்சி தான் கடந்த பத்து வருடத்துக்கு மேலே ஆட்சியில் உள்ளது ....மேல்முறையீடு செய்து எப்ப்போதோ குற்றவாளிகளை ஊழல் உண்மை எனும்பட்சத்தில் நிரூபித்து இருந்திருக்கமுடியும் ...ஆனால் .....


J.Isaac
ஆக 21, 2024 11:54

அப்படியே வடமாநிலம் போக வேண்டியது தானே. தவறை நியாயப்படுத்தக்கூடாது. ஆரூர் அவர்களே, எனக்கு நீண்ட நாள் ஒரு சந்தேகம். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அவர்களது நிர்வாகத்தில் மக்களிடம் வரி வசூல் பண்ணியது


J.Isaac
ஆக 21, 2024 13:52

தொடர்ச்சி... உயர்குலத்தை சேர்ந்த தானே


Mario
ஆக 21, 2024 09:20

பிஜேபி மாநிலம் அப்படிதான் இருக்கும்


Suppan
ஆக 21, 2024 16:53

வேலன் அவசரப்படாதீங்க அய்யா .2 ஜி மேல்முறையீடு நடந்து கொண்டு இருக்கிறது . 2018 ல் செய்யப்பட்ட மேல்முறையீடு மார்ச் 2024 ல் தான் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. மறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது


Hari
ஆக 22, 2024 05:38

Such brilliantly in London.... Sad


Narayanan Muthu
ஆக 21, 2024 09:16

பாஜக ஆட்சியின் சாதனை.


Palanisamy Sekar
ஆக 21, 2024 08:45

போதிய கல்வி அறிவிருந்தால் அவர்கள் இந்த தொழிலுக்கு வந்திருக்க மாட்டார்களா? சிறந்த நகைச்சுவை இது. இங்கே படித்தவர்கள்தான் ஏகத்துக்கு கொள்ளையடிக்கின்றார்கள் விஞ்ஞான பூர்வமாக ஒருசிலருக்கு பதவியை வைத்துக்கொண்டு பலரும் அவர்கள் நா நயத்தில் சிலரும், பலர் படித்துவிட்டு சம்பாதிக்க குறுக்கு வழியையும் தானே பயன்படுத்துகின்றார்கள். அரசியலில் படித்தவர்கள்தான் அதிக அளவுக்கும், அவர்களை வைத்து பதவிக்கு வருகின்ற பலரும் சம்பாதிப்பதில் இந்த சிறார்களை மிஞ்சிவிடுகின்றார்கள் என்பதே உண்மை. தமிழக அரசியல்வாதிகளை ஒப்பீடு செய்யும்போது இவர்கள் எல்லோரும் அப்பாவிகள்தான்


Velan Iyengaar
ஆக 21, 2024 10:38

ஊழல் என்றாலே சமீபத்தில் உலக அளவில்சாதனை புரிந்த தேர்தல் பத்திர ஊழலை விட ஒரு அற்புதமான விஞ்ஞான பூர்வ ஊழல் உலகத்திலேயே நடந்ததில்லை என்பதை மறந்து யாரும் ஊழல் குறித்து பேசிடமுடியாது ....இதில் bj கட்சியை மிஞ்ச உலக அளவில் யாருமே இல்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை