உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன் இதோ..

இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன் இதோ..

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (17.5.2024 முதல் 23.5.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன்? உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

குரு, கேது, சனி, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். சனிக்கிழமையில் நவக்கிரகங்களை வழிபட வாழ்க்கை வளமாகும்.அசுவினி: புதிய பாதை தெரியும். கடந்த வார சங்கடம் விலகும். வியாபாரம் தொழிலில் உண்டான நெருக்கடிகள் தீரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். வியாழக்கிழமை செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.பரணி: உங்கள் நட்சத்திர நாதனின் சஞ்சார நிலை லாபத்தை அள்ளித்தருவார். வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும்.கார்த்திகை 1ம் பாதம்: தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் செயல் லாபமாகும். தொழில் விருத்தி ஏற்படும். செல்வாக்கு உயரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

சந்திராஷ்டமம்

23.5.2024 அதிகாலை 3:59 மணி - 25.5.2024 காலை 10:48 மணி

ரிஷபம்

செவ்வாய், ராகு, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ராகுவால் பணவரவு அதிகரிக்கும். உங்கள் செயல் லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும், புதிய முயற்சி வெற்றியாகும்.ரோகிணி: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உறவுகள் ஆதரவு அதிகரிக்கும். பெரியோரின் உதவி உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செயல்களில் முன்னேற்றம் தோன்றும். பொருளாதாரத்தில் உண்டான தடை நீங்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

மிதுனம்

சனி, புதன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். ஆதி திருவரங்க பெருமானை வழிபட நினைப்பது நிறைவேறும்.மிருகசீரிடம் 3,4: பாக்ய ஸ்தானாதிபதி பலம் பெற்றிருப்பதுடன் அவருடைய பார்வைகளும் தைரிய, சத்ரு, லாப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் தெய்வ அருள் கிட்டும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி லாபமாகும். வருமானம் அதிகரிக்கும்.திருவாதிரை: ஜீவன ஸ்தானத்தில் ராகு செவ்வாய் கேந்திர பலம் பெறுவதால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். சிக்கல் விலகும். உத்தியோகஸ்தர்கள் செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: பாக்கிய சனியும், லாப புதனும் சுக்கிரனும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர். தொழில்,வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். புதிய செயல்களில் லாபம் ஏற்படும்.

கடகம்

கேது, புதன், குரு, சூரியன் நன்மைகளை வழங்குவர். சந்திரமௌலீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: மூன்றாமிட கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அஷ்டம ஸ்தானத்தில் ஆயுள்காரகன் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.பூசம்: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, சூரியனால் தீராத பிரச்னை முடிவிற்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் மீதிருந்த புகார் பலிக்காமல் போகும். வழக்கு சாதகமாகும்.ஆயில்யம்: தைரியமாக செயல்படுவதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலுக்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவதுடன் இயந்திரப்பணிகளில் நிதானம் அவசியம்.

சிம்மம்

சூரியன், சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். சுந்தரேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்மகம்: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். சப்தம் ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.பூரம்: தன குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் பொது இடத்தில் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.உத்திரம் 1: குருவின் பார்வைகளால் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு, பதவி வரும்.

கன்னி

சனி, சுக்கிரன், புதன், குரு நன்மைகளை வழங்குவர். விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட விருப்பம் நிறைவேறும்.உத்திரம் 2,3,4: வாரத்தின் முதல் நாளில் எதிர்பாராத செலவு தோன்றும் என்றாலும் அதன் பின் சரியாகும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியால் சங்கடம் தீரும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பிரச்னை முடிவிற்கு வரும்.அஸ்தம்: பாக்ய குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். ஆறாமிட சனியால் உடலில் இருந்த பாதிப்பு விலகும். முயற்சிக்குரிய வருமானம் உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர்.சித்திரை 1,2: குரு, சுக்கிரன், சனி, புதனின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பணவரவு திருப்தி தரும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

துலாம்

ராகு, செவ்வாய், நன்மையை வழங்குவர். காளிகாம்பாளை வழிபட நினைப்பது வெற்றியாகும்.சித்திரை 3,4: இந்த வாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சனி ஞாயிற்று அன்று பல வழிகளிலும் செலவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். திங்கள்கிழமை முதல் திருப்பம் உண்டாகும்.சுவாதி: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். முயற்சி பலிதமாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.விசாகம் 1,2,3: ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ராகுவால் முயற்சி வெற்றியாகும். செயல்களில் வேகமும் விறுவிறுப்பும் இருக்கும். உங்கள் திறமை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும், வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

புதன், குரு, கேது நன்மைகளை வழங்குவர். முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.விசாகம் 4: சந்திரனின் சஞ்சாரம் திங்கள் வரை சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். செவ்வாய் புதன் அன்று எதிர்பாராத செலவு தோன்றும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.அனுஷம்: ஏழாமிட குரு, லாப கேதுவால் முயற்சி லாபமாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடலில் இருந்த பாதிப்பு விலகும். தொழிலில் லாபம் உண்டாகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர்.கேட்டை: செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.

தனுசு

சனி, சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவர். அம்மனை வழிபட முயற்சி வெற்றியாகும்.மூலம்: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். ஆறாமிட சூரியனால் முயற்சி நிறைவேறும். எதிர்ப்பு விலகும்.பூராடம்: பஞ்சம ஸ்தான சுக்கிரனால் பணத்தேவை பூர்த்தியாகும். எண்ணியது நிறைவேறும். ஏற்றமான நிலை உண்டாகும். சொத்து சேர்க்கையும் ஏற்படும். தேடிய பொருள் கைவரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திராடம் 1: சனி, சூரியனின் சஞ்சாரங்களால் இதுவரை இருந்த சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்

ராகு, குரு நன்மைகளை வழங்குவர். குலதெய்வத்தை வழிபட தொழில் விருத்தி அடையும். உத்திராடம் 2,3,4: கடந்த வார சங்கடம் நீங்கும் மூன்றாமிட ராகுவால் முயற்சி வெற்றியாகும், செயல்கள் லாபமாகும். பணவரவு அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். வெளிநாட்டிற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு உண்டாவதால் நிலை உயரும். வாழ்க்கை வளமாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.குடும்பத்தின் நிதி நிலை அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: பாக்ய, லாப ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால் வியாபாரத்தில் இருந்த தடை விலகும் எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்

15.5.2024 மதியம் 3:25 மணி - 18.5.2024 அதிகாலை 4:15 மணி

கும்பம்

சுக்கிரன் நன்மைகளை வழங்குவார். நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.அவிட்டம் 3,4: குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு பதிவதால் மறைந்த செல்வாக்கு மீண்டும் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். சனிக்கிழமை உங்கள் செயல்களில் சில சங்கடம் தோன்றும்.சதயம்: ராகு, கேது, சனி என பலரும் சங்கடத்தை உண்டாக்கினாலும் மூன்றாமிடச் சுக்கிரனால் நன்மை உண்டாகும். குருவின் பார்வையால் எண்ணம் நிறைவேறும். செயல் வெற்றியாகும். ஞாயிற்றுக்கிழமை செயல்களில் சில நெருக்கடி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: இந்த வாரம் உங்களுக்கு யோகமான வாரமாக இருக்கும். தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் வருமானம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திங்கள்கிழமை செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டமம்

18.5.2024 அதிகாலை 4:16 - 20.5.2024 மாலை 4:42 மணி

மீனம்

சுக்கிரன், புதன், சூரியன் நன்மையை வழங்குவர். அனந்தசயன பெருமாளை வழிபட சங்கடம் குறையும்.பூரட்டாதி 4: உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய், ராகுவால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சிரமம் தோன்றும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திங்கள்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.உத்திரட்டாதி: குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவு உயரும். பனிரெண்டில் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். செவ்வாய்க்கிழமை எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.ரேவதி: சூரியனும், சுக்கிரனும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவர். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். வியாழக்கிழமை புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

சந்திராஷ்டமம்

20.5.2024 மாலை 4:43 மணி - 23.5.2024 அதிகாலை 3:58 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை