உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி சொல்வது பற்றி கவலையில்லை: சரத்பவார்

மோடி சொல்வது பற்றி கவலையில்லை: சரத்பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ‛‛ பிரதமர் மோடி தற்போது சொல்வது பற்றி கவலைப்படவில்லை'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை விமர்சித்து பேசியிருந்தார். அவர், 2004 - 2014 வரை காங்கிரஸ் மத்திய அமைச்சராக இருந்த போது, விவசாயிகள் நலனுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.இது தொடர்பாக சரத்பவார் கூறுகையில், நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, விவசாயத்துறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக என்னை சந்தித்தார். குஜராத்திற்கும் என்னை அழைத்து சென்றுள்ளார். ஒரு முறை என்னை சந்தித்த அவர், விவசாய தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள இஸ்ரேல் செல்ல விரும்புவதாக கூறினார். அவரை அழைத்து சென்றேன். தற்போது மோடி என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. இவ்வாறு சரத் பவார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மே 16, 2024 20:17

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவர்களின் இன்றைய நிலையை பார்த்தால்தான் ரொம்ப ரொம்ப கவலை அளிக்கிறது


Syed ghouse basha
மே 16, 2024 19:47

நிறை குடம் ததும்பாது


ganapathy
மே 16, 2024 22:39

ஆமா உளறும் உன்னய மாதிரி


மேலும் செய்திகள்