உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலை குனிஞ்சுதான் பேசணும்; இல்லாட்டி அடிப்பேன்! பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர்

தலை குனிஞ்சுதான் பேசணும்; இல்லாட்டி அடிப்பேன்! பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: அரசு அதிகாரி என்பதால் அமைச்சரான என்னிடம் தலை குனிந்து தான் பேச வேண்டும், இல்லாவிட்டால் குச்சியால் அடிப்பேன் என்று பெண் அரசு அதிகாரியை அமைச்சர் மிரட்டிய சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

அதிகாரம்

பொதுவாக அரசியல்வாதி என்றால் மக்கள் கூடும் இடங்களில் அவர்களின் அதிகாரம் தூள் பறக்கும். அதிலும் அமைச்சர் என்றால் சொல்லவே வேண்டாம். மற்ற மாநிலங்களின் நிலைமையை விட மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல்வாதிகள் ஆவேச ஆட்டம் ஆடும் சம்பவங்கள் மிக சாதாரணம்.

அடிப்பேன்

லேட்டஸ்ட்டாக அமைச்சர் ஒருவர் பெண் அரசு அதிகாரியை வாய்க்கு வந்தபடி இஷ்டத்துக்கு மிரட்டி அடிப்பேன் என்று கூறியிருக்கும் வீடியோ வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது?

புர்பா மித்னாபுர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் பெண் அதிகாரி மணிஷா சாகு என்பவர் ஈடுபட்டு இருந்தார். அவரின் உத்தரவுக்கு ஏற்ப ஊழியர்கள் அங்கு விதிகளை மீறி கட்டப்பட்டு இருந்த கடைகளை அகற்றும் பணிகளில் மும்முரமாக இருந்தனர். அரசின் பெரும் படையே அங்கே திரண்டிருந்த நிலையில், அவர்களின் நடவடிக்கைக்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு உருவானது.

உரிமையாளர்களுக்கு ஆதரவு

நேரம் செல்ல, செல்ல ஒருவித பரபரப்பான சூழல் நீடிக்க தகவலறிந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும், அமைச்சருமான அகில் கிரி அங்கே வந்துள்ளார். நடப்பதைக் கண்ட அவர் சற்றும் யோசிக்காமல் கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேச ஆரம்பித்து இருக்கிறார்.

போகவே முடியாது

ஒரு கட்டத்தில் நிலைமை தீவிரம் அடைய கோபம் கொண்ட அமைச்சர் அகில் கிரி, ஒருமையிலும், ஏக வசனத்திலும் பெண் அதிகாரி மணிஷா சாகுவை பேச ஆரம்பித்தார். நீ ஒரு அரசு அதிகாரி, எனவே என்னிடம் தலையை குனிந்து கொண்டு தான் பேசவேண்டும், கடைகளை இடிப்பதை நிறுத்திவிடு, மறுபடியும் இதில் மூக்கை நுழைத்தால் நீ இங்கிருந்து போகவே முடியாது என்று மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

குச்சியால் அடிப்பேன்

மிரட்டல் விடுத்ததுடன், ஆபாச வார்த்தைகளையும் சரமாரியாக பேசிய அமைச்சர் அகில் கிரி, உச்சக்கட்டமாக சொல்வதை கேட்கவில்லை என்றால் குச்சியால் உன்னை அடிப்பேன் என்று கூற மணிஷா சாகு உள்ளிட்ட பலரும் ஒரு கணம் திகைத்துப் போயினர்.

வீடியோ

அமைச்சர் ஒருவரின் இந்த வித அராஜக போக்கை அங்குள்ள சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர்.

பா.ஜ., வலியுறுத்தல்

அராஜக போக்குடன் பெண் அரசு அதிகாரியை வசைபாடிய அமைச்சர் மீது முதல்வர் மம்தா பானர்ஜி கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

ram
ஆக 08, 2024 15:23

மத்திய அரசு இந்த பத்து வருடங்களில் எந்த விதமான நடவடிக்கைகளும் திமுக மற்றும் மம்தா ஆட்சிக்கு எதிராக எடுக்கவில்லை, காரனம் தெரியவில்லை ஒருவேளை அவர்களை பார்த்துபயம் போல. இதுவேய காங்கிரஸ் ஆட்சியில் இருந்துருந்தால் இந்த ஆட்சிகளை 356 உபயோக படுத்தி களைத்து இருப்பார்கள்.


Sankar SKCE
ஆக 06, 2024 10:18

ஏன் 356 இன்னும் பயன்படுத்தவில்லை மத்திய அரசு என்பது ஆச்சரியமாக இருக்கிறது?


Sampath Kumar
ஆக 06, 2024 08:19

பொதுவா எல்லா கட்சி அமைச்சர்களும் இப்படி பேசுவது கிடையாது ஆனாலும் அவரின் பதவி அப்படி பேச வைக்கிறது வயநாடு சம்பவம் தேசிய பேரிடராக் அறிவிக்க வேண்டும் என்று கேரளா முதல்வரும் ராகுல் காந்தியும் வலியுறுத்த ஒரு முன்னாள் பிஜேபி அமைச்சர் அணுக முரளிதரன் என்ற சங்கி சொல்லுகிறது முடியாது என்று காரணம் காங்கிரஸ் அரசு இருந்த பொது இந்தமாதிரி சம்பவம் எல்லாம் பேரிடராக அறிவிக்க சட்டம் இல்லை என்டர்தாம் அதுனால நாங்களும் அதைத்தான் சொல்லுவோம் என்று மார் தடுக்கினாரா அக்கா. இது பேரிடர் என்று தோன்றவில்லை மாறாக காங்கிரஸ் பீதின்றல் நக்கலும் தின்போம் என்கின்ற மனோபாவம் தான் வளர்ந்து உள்ளது மனித நேயம் எல்லாம் அறுந்து போனது மக்களின் துயரம் எல்லம்மவர்களுக்கு பொழுது போக்காகி போனது இப்படி பட்ட கேவலமான மனஇலயில் உள்ளவர்களையே அரசியல் வியாதிகள் என்ன செய்ய அரை வேக்காடுகளும் , ஆணவ கார்களும் மனித நேயத்தை குழி தோண்டிபுதைப்பவர்களும் பெருகி விட்டனர்


மாயவரத்தான்
ஆக 06, 2024 11:43

பெரிய புத்திமான் மாதிரி பேசக்கூடாது. தேசிய பேரிடர் என்று அறிவிக்கிற ஒரு முறையே அரசியல் அமைப்பில் கிடையாது. அப்படி எந்த ஒரு சம்பவத்தையும் இதுவரை அறிவித்ததும் கிடையாது. அப்படி இருக்க முட்டாள்தனமாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த துயரமான நேரத்திலும் ஆளும் பாஜகவிற்கு எதிராக கேவலமான அரசியல் செய்ய இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்பும் போது அதற்கு நாமும் புரியாமல் ஆதரவு அளிக்கக்கூடாது.


skv srinivasankrishnaveni
ஆக 05, 2024 11:33

மந்திரிசபை கவிழ்ந்தால் நீ மாதிரியே இல்லீய்யா சாமானியன்தான் ஆனால் அரசாங்க அதிகாரிகள் தேர்வுகள் எழுதியேதான் பதவிக்கு வந்தாங்க உங்களிடம் தலைவணங்க மாட்டாங்க நீங்க போனால் மக்களே உங்களை சீந்தவேமாட்டாங்க இதுதான்யா உண்மை அடுத்த தேர்தலிலே நீ காணாமல்போயிடுவே மந்திரிப்பதவி உங்க சி ம் போட்டபிச்சை niyaabagamvachchukkungka


Barakat Ali
ஆக 04, 2024 20:52

பெண்ணியம் பேசிய ஈவேராவை ஆதரிக்கும் கழகக் கண்மணிகள், இது போன்ற அமைச்சரை வைத்திருக்கும் மேற்குவங்க முதல்வரையும் ஆதரிக்கிறார்கள் .....


C.SRIRAM
ஆக 04, 2024 20:34

இந்த பயலே குச்சி மாதிரி இருக்கான் . என்ன திமிர் .


நிக்கோல்தாம்சன்
ஆக 04, 2024 19:03

தமிழ் நாட்டு பொன்முடி , கருநாடக கார்கே , இப்போ பெங்கால் புலிகள் என்று எல்லாம் பெண்களை குறிவைத்து அசிங்கம் செய்கிறார்களே ,


என்றும் இந்தியன்
ஆக 04, 2024 18:39

பெண் என்றால் புர்க்கா ஏன் போட்டு வரவில்லை என்று சொல்லாமல் சொல்லுகின்றார்


cbonf
ஆக 04, 2024 17:29

o மேற்கு வங்கத்தில் சுமார் 2 கோடி ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். o மம்தாவும் கம்யூனிஸ்டுகளும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு போலி வாக்காளர் அடையாள அட்டைகள் மூலம் உதவியுள்ளனர். o திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு அமைச்சகத்திலும் பயங்கர ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. o மேற்கு வங்கத்தை 10 ஆண்டுகளுக்கு மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். o சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு, வாக்குரிமை மறுக்கப்படும் வரை, மேற்கு வங்கத்தில் நாடாளுமன்ற அல்லது மாநிலத் தேர்தல்கள் நடைபெறக்கூடாது.


D.Ambujavalli
ஆக 04, 2024 17:10

எம். எல். ஏ , எம். பி. , அமைச்சர் , என்று. ஆகிவிட்டாலே ஆணவம், மொட்டை அதிகாரம் வந்துவிடும் போலும்


skv srinivasankrishnaveni
ஆக 05, 2024 11:36

திமுருபிடிச்ச அரக்கர்கள் நிச்சயம் எவ்வகைலேயோ அடிவாங்கப் போறான் பாருங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை