உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் கோயில் விழாவில் சீருடையுடன் பூக்குழி இறங்கிய போலீசார்

தெலுங்கானாவில் கோயில் விழாவில் சீருடையுடன் பூக்குழி இறங்கிய போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானாவில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு வந்த போலீசார் சீருடையுடன் தீ மிதி விழாவில் பங்கேற்று பூக்குழி இறங்கிய புகைப்படம், வீடியோ வைரலாகி வருகிறது.தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நார்கேட் பள்ளி என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோயில் திருவிழா நடந்தது. இதில் பாதுகாப்புக்காக உள்ளூர் பெண் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விழாவில் முக்கிய நாளான நேற்று தீ மிதி விழா நடந்தது. இதில் அப்பகுதி கிராமவாசிகள் பூக்குழி இறங்கினர். அப்போது பாதுகாப்புக்காக வந்த பெண் போலீசார் மற்றும் சக போலீசாரும் சீருடையுடன் பூக்குழி இறங்கினர். இதன் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.சீருடையுடன் தீ மிதித்தது குறித்து துறை ரீதியாக விளக்கம் கேட்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Arasu
பிப் 23, 2024 14:55

இது தவறு.... போலீஸ் உடையில் இது போன்று நடப்பது தவறு


தமிழ்செல்வன்
பிப் 23, 2024 10:52

இது ஒன்னும் தவறில்லை, தமிழ் நாட்டில் பண்ணாரி அம்மன் கோவிலில் போலீஸ் நண்பர்கள் சீருடையில் பூ மிதிக்கிறார்கள் . பக்தி இருந்தால் போதும் .


Dwarakanath Putti
பிப் 23, 2024 06:46

Avanga onnum voor panathai kollai adikka வில்லை aduthavargalai achuthrutha villai . Oru echarikkai koduthu anuppalam.


N SASIKUMAR YADHAV
பிப் 23, 2024 01:12

இந்துமத துரோக கட்சியென நிருபிக்கிறது ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கட்சி . உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற கணக்காக தெலுங்கானாவும் போகபோகிறது ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸுக்கு


kijan
பிப் 23, 2024 00:25

இதை ஏன் சர்ச்சை ஆக்குகிறீர்கள் ....மாற்று மதத்தினர் பணிநேரத்தில் சீருடையிலேயே பிரேயர் பண்ணும்போது ....இந்து மதத்தினர் அவர்கள் விருப்பப்படி சாமி கும்பிட்டால் என்ன ? இதைபார்த்தபின் அங்குள்ள மக்களுக்கும் காவல் துறையினர் மீது ஒரு மரியாதை வரும் ..


Ramesh Sargam
பிப் 23, 2024 00:07

இதில் சர்ச்சை என்ன வேண்டி கிடக்கு? வெறும் காலுடன் பூ மிதித்திருக்கிறார்கள். அவர்களின் பக்தியை மெச்சவேண்டுமே தவிர, சர்ச்சை எல்லாம் செய்யக்கூடாது. தமிழகம் ஆக இருந்திருந்தால், இந்த விழாவுக்கு தடை விதித்திருக்கும் அங்குள்ள திருட்டு ஹிந்து விரோத திமுக அரசு.


Sundar
பிப் 22, 2024 23:20

இதுல என்ன தப்பு? அவங்களும் மக்கள் தான். Uniform டிரஸ் போட்டா பாவம் இல்ல. போலீஸ் எல்லா கோயில்லயும் சாமி கும்பிடறது இல்லையா? ஒன்றும் தப்பில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை