உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிப்பு: தலைமை பொருளாதார ஆலோசகர் பெருமிதம்

சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிப்பு: தலைமை பொருளாதார ஆலோசகர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது என தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். இது குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்துள்ளது.

பணவீக்கம்

இந்திய குடும்பங்கள் பண கஷ்டத்தில் இல்லை. அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. பருவநிலை மாற்றத்தால், உலக அளவில் பிரச்னைகளை சந்திக்கும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. தனியார் முதலீடுகள் 2021ம் ஆண்டுக்கு பிறகு சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும். தொழில் மற்றும் உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 22, 2024 16:20

படிச்ச உங்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி புரியுது. படிக்காத ஒருசில தேசத்ரோககட்சியினருக்கு புரியலையே…


மேலும் செய்திகள்





புதிய வீடியோ