உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபார வெற்றி!

இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபார வெற்றி!

புதுடில்லி: ஏழு மாநில சட்டசபை இடைத்தேர்தல்களில், 'இண்டியா' கூட்டணி 10 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., இரண்டு இடங்களை மட்டுமே பிடித்தது.லோக்சபா தேர்தலை அடுத்து நடந்த முதல் இடைத் தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் வென்றதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தது, மறைவு போன்ற காரணங்களால் இந்த இடைத் தேர்தல் நடந்தது.

அதிர்ச்சி

நேற்று ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்த தொகுதிகள் 13ல், இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களை கைப்பற்றின. பா.ஜ., இரண்டு இடங்களில் வென்றது. ஒரு தொகுதியில் சுயேச்சை வென்று அதிர்ச்சி அளித்தார்.தமிழகம், பஞ்சாப், ம.பி., பீஹார் மாநிலங்களில் தலா ஒரு தொகுதி, உத்தரகண்டில் 2, ஹிமாச்சலில் 3, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் தேர்தலை சந்தித்தன. தமிழகத்தின் விக்கிரவாண்டியில் பா.ஜ., ஆதரவுடன் போட்டியிட்ட பா.ம.க.,வை, மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., தோற்கடித்தது. பஞ்சாபில் ஆம் ஆத்மியில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய எம்.எல்.ஏ.,வை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அவரை கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வீழ்த்தியது. மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நான்கில் மூன்று தொகுதிகள் பா.ஜ., வசம் இருந்தவை. பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தரகண்டில் தேர்தல் நடந்த 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. குறிப்பாக, ஹிந்துக்களின் புனித தலமான பத்ரிநாத் தொகுதியை அக்கட்சி தட்டிப்பறித்தது. அயோத்தி நகரை உள்ளடக்கிய உ.பி.,யின் பைசாபாத் லோக்சபா தொகுதியை தொடர்ந்து பத்ரிநாத்தும் கையைவிட்டு போனது, பா.ஜ.,வில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. மற்றொருவர் காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ., ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வென்ற இரு தொகுதிகளும் கடந்த முறை சுயேச்சைகள் வசம் இருந்தன. காங்கிரஸ் அரசுக்கு எதிராக வியூகம் அமைக்க சுயேச்சைகளை சுவீகரித்த பா.ஜ., இருவரையும் இத்தேர்தலில் அதிகாரப்பூர்வமாக களம் இறக்கியது. கடைசி நேரத்தில் கட்சி மாறி வந்தவர்களுக்கு அக்கட்சி அளித்த வாய்ப்புகள் இழப்பிலேயே முடிகின்றன. இம்மாநிலத்தில் ஒரு தொகுதியை அக்கட்சி தக்கவைத்துக் கொண்டது. லோக்சபா தேர்தலிலும், அடுத்து வந்த ராஜ்யசபா தேர்தலிலும் பாரதிய ஜனதாவிடம் அடி வாங்கிய ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இடைத்தேர்தல் வெற்றியால் பழி தீர்த்துக் கொண்டார். தேரா தொகுதியில் அவரது மனைவி கமலேஷ் வெற்றி பெற்றார்.

எதிர்பாராத வெற்றி

முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்துள்ள பீஹாரின் ரூபாலி தொகுதியில், எதிர்பாராத விதமாக சுயேச்சை வேட்பாளர் வென்றார். எனினும், அவர் நீண்டகாலமாக மாநில அரசியலில் பிரபலமாக விளங்கும் நபர். வன்முறைக்கு பெயர் போன ஒரு அமைப்பின் தலைவராக இருந்தவர். அங்கே ஐக்கிய ஜனதா தளம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஹிமாச்சல் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒரு இடங்களில் மட்டுமே பா.ஜ., வென்றது. மற்ற மாநில இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வென்ற நிலையில், உத்தரகண்டில் இரண்டு தொகுதிகளிலும் அங்கு ஆளும் பா.ஜ., தோல்வி அடைந்தது. காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி ஆகியவை இண்டியா கூட்டணியில் இருந்தாலும், மேற்கு வங்கத்திலும், பஞ்சாபிலும் காங்கிரசுக்கு எதிராக திரிணமுல் காங்., மற்றும் ஆம் ஆத்மி போட்டியிட்டன.இடைத்தேர்தல் முடிவு கள் இண்டியா கூட்டணிக்கு உற்சாகம் அளித்துள்ளன. விரைவில் வர இருக்கும் மூன்று மாநில சட்டசபை தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இது உதவும் என தலைவர்கள் நம்புகின்றனர். பா.ஜ., வட்டாரத்தில் அதிர்ச்சி தெரிகிறது. பா.ஜ.,வின் ஆணவத்துக்கு விழுந்த இரண்டாவது அடி என்கிறது காங்கிரஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.SANTHANAM
ஜூலை 15, 2024 01:17

காங்கிரஸ் 5 இடத்துல தோல்வி. 3 இடத்தில போட்டியிட வில்லை. இதுல எப்படி 11 இடங்களில் இண்டி கூட்டணி வெற்றி அப்படின்னு போடுறீங்க


Navnirmaan Samrakshana
ஜூலை 14, 2024 15:36

இது இந்த வெற்றி பெற்ற பெரும்பான்மை தொகுதிகள் காங்கிரஸ் காலங்காலமாக வெற்றி பெற்று வந்தவை. ஏதோ காங்கிரஸின் புதிய எழுச்சி என்பது போல சித்தரிப்பது எல்லாம் கப்சா கடாகட் பண டிரான்ஸ்பரை எதிர்பார்த்து காங்கிரஸ் அலுவலகம் வாசலில் நிற்கும்


abdulrahim
ஜூலை 14, 2024 14:29

இனிமேலும் இந்து, சந்து னு சொல்லி பாஜாக இந்துமக்களை ஏமாற்ற முடியாது என்பதைத்தான் அயோத்தி மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்கள் சொல்லாமல் சொல்லி உள்ளன.


Venkatesh
ஜூலை 14, 2024 18:29

முட்டி மூளை ங்கறது சரியாகத்தான் இருக்கு.... காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில இடைத்தேர்தல்ல ஜெயிச்சு கொண்டாட்டமா? மானங்கெட்ட பொழப்பு


sridhar
ஜூலை 14, 2024 12:29

இடைத்தேர்தல் எல்லாமே கண்துடைப்பு தான் , அந்தந்த மாநில ஆளும்கட்சி கூட்டணி தான் வெல்லும்.


ramesh
ஜூலை 14, 2024 10:31

பிஜேபியின் தவறான ஆட்சி முறைக்கு வடநாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள் .இது தான் தொடக்கம்


Nagendran,Erode
ஜூலை 14, 2024 12:58

விடியல் திராவிடமாடல் ஆட்சிக்கு 2026 ல் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கிறார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 14, 2024 13:02

பத்து, பதினைந்து தொகுதிகள்தான் என்பதாலும், சந்தேகம் வரக்கூடாது என்பதாலும் பாஜக இவற்றில் முறைகேடு செய்யவில்லை.. விட்டுக்கொடுத்துவிட்டது.. இப்படித்தானே உங்கள் கும்பலுக்கு டயலாக் எழுதித் தரப்பட்டது? நீங்களும் இப்படித்தான் புலம்பியிருக்கணும் .....


ramesh
ஜூலை 14, 2024 17:29

உங்கள் கும்பலுக்கு தினமும் இப்படித்தான்புலம்பவேண்டும் என்று எழுதி கொடுக்க பட்டுள்ளதா .இப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டீர்களே


S.L.Narasimman
ஜூலை 14, 2024 08:29

சரியான பலமான கட்சிகளுக்கு மதிப்பளித்து கூட்டணி வைத்தால் வெற்றி கிட்டியிருக்கும். மமதை, தலைகனம் பிடித்து தங்கள் பலம் தெரியாது ஆடுவோர்களை நம்பி தேர்தலை சந்தித்தால் அடுத்த தேர்தலுக்குள் பிசெபி காணாமல் போயேவிடும்.


Kasimani Baskaran
ஜூலை 14, 2024 05:10

ஏற்கனவே இவை எதிர் அணியிடம் இருந்த தொகுதிகள். பாஜகவுக்கு இரண்டு தொகுதிகள் என்பதும் அதே வகையறா. ஒன்றரை மாதத்துக்குள் நிலைமை மாறும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. திராவிட மாடலை காப்பியடித்து உருவாக்கப்பட்ட கடாக்கட் வங்கி தொழில் நுணுக்கம் புதியது. அங்குள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். ஆகவே அடுத்த முறை காங்கிரஸ் ஒட்டுக்கேட்டு போக முடியாது.


Senthoora
ஜூலை 14, 2024 11:51

சமாளிப்பு. எதிர் அணியிடம் இருந்து பறிப்பதுக்கு தான் தேர்தல்.


தாமரை மலர்கிறது
ஜூலை 14, 2024 05:05

இடைதேர்தலை பற்றி பிஜேபி கவலைப்பட்டதில்லை. காங்கிரஸ் கட்சியின் நாநூற்றிநாற்பது சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த பத்தாண்டில் பிஜேபியில் இணைந்துஉள்ளனர். இப்போது ஜெயித்தவர்களும் விரைவில் பிஜேபியில் இணைந்துவிடுவார்கள். இதுவும் பிஜேபிக்கு கிடைத்த வெற்றியாக விரைவில் மாறபோகிறது. கவலை வேண்டாம்.


abdulrahim
ஜூலை 14, 2024 14:24

இந்த பொழப்புக்கு .....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி