உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்

புதுடில்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியப் முப்படைகள் திறன் காரணமாக ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் ( Asia Power Index -2025) இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் 38.5 புள்ளிகளை இந்தியா பெற்றிருந்தது. இந்தாண்டுக்கான பட்டியலில் 40 புள்ளிகளைப் பெற்ற இந்தியா, முக்கிய சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா(80.4 புள்ளிகள்), 2வது இடத்தில் சீனா( 73.5 புள்ளிகள்)3வது இடத்தில் இந்தியா(40 புள்ளிகள்)4வது இடத்தில் ஜப்பான்,5வது இடத்தில் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.ஆஸ்திரேலியா 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்த ஆய்வை நடத்திய லோவா நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் ராணுவம் மற்றும் பொருளாதார திறன் இரண்டும் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதன் புவிசார் அரசியல் அடிப்படையில் இந்தியாவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ராணுவத்திறனும் மேம்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பரேஷன் சிந்தூர்

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் மதத்தை கேட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே மாதம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. அதில் அந்நாட்டின் பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. விமானப்படை தளங்கள் சேதம் அடைந்ததால் தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது. இதனை இந்தியா ஏற்றுக் கொண்டதால் இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை