உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீருக்குள் 600 பாக்., கமாண்டோக்கள் ஊடுருவல்? தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்

காஷ்மீருக்குள் 600 பாக்., கமாண்டோக்கள் ஊடுருவல்? தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 600 கமாண்டோக்கள், காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா மற்றும் முன்னாள் டிஜிபி ஷேஸ் பால் வைத் ஆகியோர் கூறியுள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

3 குழுக்களாக

இது தொடர்பாக அம்ஜத் அயுப்மிர்சா வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற குழு (எஸ்எஸ்ஜி) அதிகாரி அதில் ரெஹ்மானி, காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறார். எஸ்எஸ்ஜி பட்டாலியனின் 600 கமாண்டோக்கள் குப்வாரா உள்ளிட்ட பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளனர். உள்ளூர் ஜிகாதி குழுவினர், அவர்களுக்கு உதவுகின்றனர். பூஞ்ச், உரி, ரஜோரி ஆகிய பகுதிகளில் தலா 150 பேர், 3 குழுக்களாக பிரிந்து ஊடுருவி உள்ளனர்.

நோக்கம்

எஸ்எஸ்ஜி குழுவில் லெப்டினன்ட் காலினல் அந்தஸ்தில் உள்ள ஷாகித் சலீம் ஜன்ஜூவா, தற்போது காஷ்மீரில் ஊடுருவி உள்ளார். இவர், தாக்குதல் நடத்தும் திட்டங்களை தயாரித்து வருகிறார். இந்திய ராணுவத்தின் 15 கார்ப்ஸ் பிரிவினருடன் மோதுவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.

தயார்

காஷ்மீருக்குள் ஊடுருவ எஸ்எஸ்ஜி குழுவின் இரண்டு பட்டாலியன்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் சாமானிய மக்கள் போல் ஊடுருவி உள்ள இவர்கள், மக்களுடன் கலந்து மறைந்துள்ளனர். தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். அம்மாநில முன்னாள் டிஜிபி ஷேஸ் பால் வைத்தும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.

தேடுதல் பணி தீவிரம்

இதனையடுத்து காஷ்மீரில், இந்திய ராணுவத்தினர் கிராமம், கிராமமாக தீவிரமாக கமாண்டோக்களை தேடி வருகின்றனர். இந்த பணியை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. தேடும் பணி குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய ராணுவ தளபதிக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

அப்பாவி
ஜூலை 31, 2024 00:25

600 பேரா?


Kasimani Baskaran
ஜூலை 30, 2024 22:08

இந்தியா பெரிதாக எதையோ செய்யப்போகிறது மட்டும் தெளிவாகிறது.


செந்தில்குமார்
ஜூலை 30, 2024 20:40

ஆசாத் காஷ்மீரை மீட்பதுதான் ஒரே வழி


செந்தில்குமார்
ஜூலை 30, 2024 20:38

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் ஒரே வழி


Ramesh Sargam
ஜூலை 30, 2024 20:09

பாக் கமாண்டோக்கள் கண்டவுடன் போட்டுத்தள்ளவேண்டும்.


unni unn
ஜூலை 30, 2024 19:47

enough is enough. there is limit for everything. we should not allow our enemy to disturb peace in kashmir


Sundharam S.balaji
ஜூலை 30, 2024 16:43

இதற்கு காரணம் பாக். தீவிரவாதிகளுடன் கூட்டணி வைத்து உள்ள காங்கிரஸ்யும் அதான் கூட்டணிகளும் தான் முழு காரணம் சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லிட்டு இந்திய மக்களை கொன்று குவிக்க திட்டம் போடுகிறார்கள்.


Raghavan
ஜூலை 30, 2024 14:51

இதற்கு எல்லாம் காரணம் இங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் சுயநலம் மட்டுமே சிறுபான்மையினர் என்ற போர்வையில் போர்வையில் இந்த நாடு நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் இதை உண்மையான தேச பக்தி உள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் இந்த நாடு மிகச்சிறந்த வளர்ச்சி அடைந்த நாளாக மாறும் அதை விரும்பாத சில வெளிநாட்டு சக்திகளின் சதியே காரணம்


Kumar Kumzi
ஜூலை 30, 2024 14:41

கண்டதும் சுட்டுக்கொல்லுங்கள் விசாரணை என்ற பெயரில் பிரியாணி போட்டு வளர்க்க வேண்டாம்


V RAMASWAMY
ஜூலை 30, 2024 14:37

No more waiting, striking Pak is the only solution, ning from LeT, etc.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை