உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க.,வை வேரோடு அகற்றுவது முக்கியம்: தே.ஜ., கூட்டணி குறித்து பிரதமர் மகிழ்ச்சி

தி.மு.க.,வை வேரோடு அகற்றுவது முக்கியம்: தே.ஜ., கூட்டணி குறித்து பிரதமர் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' தி.மு.க.,வை வேரோடு அகற்றுவது முக்கியம். அதனை தே.ஜ., கூட்டணி உறுதி செய்யும் ,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பா.ஜ.,உடன் அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வலிமையாக ஒன்றுபடுவோம். தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தே.ஜ., கூட்டணி கட்சிகள் இணைந்து வளர்ச்சிப்பாதையில் தமிழகத்தை கொண்டு செல்வோம். மாநிலத்திற்கு விடா முயற்சியுடன் சேவை செய்வோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1057t05l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசை நாங்கள் உறுதி செய்வோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும், ஊழல் தி.மு.க.,வை விரைவில் வேரோடு அகற்றுவது முக்கியம். அதை தே.ஜ., கூட்டணி உறுதி செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

SP
ஏப் 12, 2025 11:23

பெரும் மதிப்புக்குரிய பிரதமர் அவர்களே, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக நம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமான ஊழல்வாதி எடப்பாடி யாருக்காக அண்ணாமலை அவர்களை பலிகடா ஆக்கி இருக்கிறீர்களே இது நியாயமா? திமுகவை அதன் ஊழல் வழக்குகளால் சட்ட நடவடிக்கையின் Let's முடக்குவதை விட்டுவிட்டு இப்படி அநியாயத்திற்கு உண்மையாக உழைத்த ஒரு நபரை இப்படி அசிங்கப்படுத்தி இருக்கக் கூடாது தாங்கள் மத்தியில் அவருக்கு இனி எந்த பதவி கொடுத்தாலும் இதற்கு ஈடாகாது தமிழகத்தை பொறுத்தவரை எடப்பாடிOnly தான் சாணக்கியர் நினைத்ததை சாதித்துக் கொண்டார் அதற்கு தாங்கள் எல்லாம் துணை போய் இருக்கிறீர்கள். எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து இன்று தான் முதன்முறையாக பாஜகவை அதன் செயல்பாட்டை விமர்சித்திருக்கிறேன் அதுவே மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆட்சிக்காக இன்னொரு ஊழலை ஆதரிக்காதீர்கள் வேறு நல்ல முடிவு எடுங்கள் நம் காலம் இருக்கின்றது இவர்களோடு கூட்டணி என்பது தமிழக பொது மக்களாகிய எங்களுக்கு அவமானமாக இருக்கின்றது பாஜகவும் பத்தோடு பதினொன்றாக மாறிவிட்டது. நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் நன்றி ஜெய்ஹிந்த்.


venugopal s
ஏப் 12, 2025 10:51

அது நடக்காது என்பதை வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலமாக தமிழக மக்கள் பாஜகவினருக்கு புரிய வைப்பார்கள்!


அப்பாவி
ஏப் 12, 2025 10:41

கூட்டணிக்காக ய்யாரை வேணும்னாலும் பலி குடுக்க ரெடி.


Indian
ஏப் 12, 2025 10:23

தி மு க ஆலமரம் . நேற்று முளைத்த பாஜாவால் எதுவும் செய்து முடியாது


Indian
ஏப் 12, 2025 08:52

சாணக்கிய தந்திரம் தமிழ் நாட்டில் ஈடுபடாதுங்க .......


P. SRINIVASAN
ஏப் 12, 2025 08:48

தமிழ் மக்கள் பகுத்தறிவாதிகள், சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. அண்ணாதிமுக தொண்டர்கள் பிஜேபி பக்கம் போகமாட்டார்கள். பிஜேபியை நாங்கள் விரட்டி அடிப்போம். மதவாதம் இங்கு செல்லாது.


Thetamilan, Chennai
ஏப் 12, 2025 08:40

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது நேர்மையான, கண்டிப்பான ஆசிரியர்களை, மாணவர்களுக்கு பிடிக்காது...ஆனால் அவர்கள்தான் உண்மையான வழிகாட்டிகள்...ஆனால் பள்ளிப் பருவத்தில் அது புரிவதில்லை...அதே வேளை, வகுப்பு நடத்தாமல், அரட்டை பேச்சு பேசும் ஆசிரியர்களை மிகவும் பிடிக்கும்...அவர்களை நம்பினால் வாழ்வே தொலைந்து போகும்...அரசியலும் அப்படித்தான்...நாட்டை திறம்பட நடத்தி, தேசியவாதிகளின் வாக்கை மட்டும் பெற்று, மூன்றாவது முறை ஆட்சி செய்யும் மோதி எங்கே... மக்களை சுரண்டி, மெகா ஊ..ல் செய்து, மடைமாற்று பேச்சுக்களால், மக்களை மு..டாள்களாக்கி , பி..வினை வாத வாக்குகளால், ஆட்சி நடத்தும் இவர்கள் எங்கே...இன்னமும் இங்கு மத்திய அரசை குறை கூறும் அனைத்து மங்கிகளும் தேசப் பற்று கிலோ எவ்வளவு என கேட்கும் இதர தேச விசுவாசிகளே...சந்தேகமில்லை...ஜெய் பாரத்...


Indian
ஏப் 12, 2025 08:40

வாய்ப்பே இல்ல ராஜா . முதல்ல நோட்டா வோட போட்டி போட்டு ஜெயிக்க பாருங்க


Balasubramanian
ஏப் 12, 2025 08:22

பெரியார் மண்ணு திராவிட சக்தி என்று எல்லாவற்றையும் அடிவரை சுறண்டி எடுத்து விற்றாகி விட்டது! இனி ஆன்மீக பாரம்பரியம் நிறைந்த வான் புகழ் நிறைந்த தமிழ்நாடு மலர வேண்டும்!


s.sivarajan
ஏப் 12, 2025 07:05

தமிழக பா ஜ. க உக்காக இந்த மாபெரும் சாதனையை செய்து முடித்த பெருமகிழ்ச்சியில் அண்ணாமலையின் ஊழலற்ற தமிழக கனவு நிறைவேறுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை