மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
ஹூப்பள்ளி,: ''நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் கனவு,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் கனவு. லோக்சபா தேர்தலில் போட்டியிட கட்சி அறிவுறுத்தினால் போட்டியிடுவேன்.கட்சி தலைவர்கள் எந்த முடிவெடுத்தாலும், அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். கட்சிக்காக நேர்மையாக பணியாற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.'காங்கிரஸ் எம்.பி., சுரேஷை சுட்டு கொல்ல வேண்டும்' என, ஈஸ்வரப்பா கூறியது குறித்து நிருபர்கள் கேட்ட போது, 'மஹாத்மா காந்தியை பா.ஜ.,தான் கொன்றது என்று 70 ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவீர்கள். மஹாத்மாவை பா.ஜ., கொன்றது என்று மீண்டும் மீண்டும் கூறுவது சரியல்ல' என்றார்.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13