உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  காசி தமிழ் சங்கமம்: பனாரஸுக்கு ஏழு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 காசி தமிழ் சங்கமம்: பனாரஸுக்கு ஏழு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சியை ஒட்டி, சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து, உத்தர பிரதேசம் மாநிலம் பனாரஸுக்கு ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அறிக்கை: கன்னியாகுமரியில் இருந்து வரும் 29ம் தேதி காலை 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் இரவு 11:15 மணிக்கு பனாரஸ் செல்லும். பனா ரஸில் இருந்து, டிச., 5ம் தேதி இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் காலை 11:30க்கு கன்னியாகுமரி வரும் சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 2ம் தேதி காலை 4:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 11:15 மணிக்கு பனா ரஸ் செல்லும். பனாரஸில் இருந்து, டிச., 7 இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் இரவு 11:30க்கு சென்ட்ரல் வரும் கோவையில் இருந்து டிச., 3 இரவு 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் இரவு 11:15 மணிக்கு பனாரஸ் செல்லும். பனாரஸில் இருந்து டிச., 9 இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் காலை 8:30க்கு கோவை வரும் சென்ட்ரலில் இருந்து டிச., 6 காலை 4:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 11:15 மணிக்கு பனாரஸ் செல்லும். பனாரஸில் இருந்து டிச., 11 இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாளில் இரவு 11:30க்கு சென்ட்ரல் வரும் கன்னியாகுமரியில் இருந்து டிச., 7 காலை 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் இரவு 11:15 மணிக்கு பனாரஸ் செல்லும். பனாரஸில் இருந்து, டிச., 13 இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் காலை 11:30க்கு கன்னியா குமரி செல்லும் கோவையில் இருந்து டிச., 9 மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாள் இரவு 11:15க்கு பனாரஸ் செல்லும். பனாரஸில் இருந்து டிச., 15 இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் காலை 8:30க்கு கோவை செல்லும் சென்ட்ரலில் இருந்து டிச., 12ம் தேதி காலை 4:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் இரவு 11:15 மணிக்கு பனாரஸ் செல்லும். பனாரஸில் இருந்து, டிச., 17 இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாவது நாள் இரவு 11:30க்கு சென்ட்ரல் வரும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் ஆறு, 'ஏசி' பெட்டிகளில் மட்டும், 'காசி தமிழ் சங்கமம் பிரதிநிதிகள்' என, குறிப்பிடப்பட்டு இருக்கும். முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை