உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா பெயரை கேரளம் என மாற்றக்கோரி தீர்மானம்: 2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றம்

கேரளா பெயரை கேரளம் என மாற்றக்கோரி தீர்மானம்: 2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் கொண்டுவந்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.இந்த நிலையில், இன்று (ஜூன் 24) கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற வலியுறுத்தி 2வது முறையாக கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கும்பட்சத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூன் 24, 2024 22:34

கேரளம் என்ற பெயரில் சமஸ்கிருதமோ ஹிந்தியோ இல்லையே, அதனால் மத்திய பாஜக அரசு இதை நிராகரித்து விடும்!


தமிழ்வேள்
ஜூன் 24, 2024 20:14

தமிழகத்தில் பெயரையும் தமிழ் நாடு என்பதற்கு பதிலாக தக்ஷிண பிரதேசம் ஆக மாற்றி தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்.... இல்லையெனில் நாஸ்திக தேசதுரோக ஒழுக்கம் அற்ற திராவிடம் அழியாது.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2024 20:11

ஹிந்தி செய்திகளில் கேரள் ,கர்நாடக் என்று உச்சரித்து சிதைக்கின்றனர் . தமிழக ஜால்ரா சானல்களில் தமிழையே உச்சரிக்கத் தெரியாமல் இருப்பதுதான் செய்தியாளர்களுக்கான முக்கிய தகுதி.


Karthi N
ஜூன் 24, 2024 19:52

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கு எதுல கேரள பேர கேரளம் நு மாதுன மட்டும் உருப்படவ போகுது ? கார்த்தி பாலக்காடு


அசோகன்
ஜூன் 24, 2024 17:55

பிச்சைகார மாநிலம் என வையுங்கள் சரியாக இருக்கும்


.Dr.A.Joseph
ஜூன் 24, 2024 17:17

கேரளம் இல்லை . சேரளம் என்பதே சரி. கிபி 9 ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் கேரளாவாக ஆனது.


Svs Yaadum oore
ஜூன் 24, 2024 17:15

என்னதான் பெயரை மாற்றினாலும் அவன் மாநிலத்து மருத்துவ கழிவை தமிழ் நாட்டில் கொண்டுவந்துதான் கேரளாக்காரன் கொட்டுவார் .....


என்றும் இந்தியன்
ஜூன் 24, 2024 16:52

மிக மிக தவறு கேரளம் அல்ல "மலைஞாளம்" என்று மாற்றுவதே சிறந்தது


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ