உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., உளவாளியான யு டியூபருக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரளா

பாக்., உளவாளியான யு டியூபருக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரளா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரளாவில் சுற்றுலாவை விளம்பரப்படுத்த அம்மாநில அரசால் அழைக்கப்பட்ட சமூக ஊடக பிரபலங்களில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.

விசாரணை

பாகிஸ்தானுக்கு பல முறை சென்ற இவர், அங்கு வி.ஐ.பி., போல நடத்தப்பட்டதும், உளவு ஏஜென்ட்களை சந்தித்து நம் ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பஹல்காம் தாக்குலுக்கு சில நாட்களுக்கு முன், அவர் பாக்., சென்றதும் தெரிய வந்தது. இந்நிலையில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கும் கேரளாவில், சுற்றுலாவை விளம்பரப்படுத்த அழைக்கப்பட்ட சமூக ஊடக பிரபலங்களில், உளவு குற்றச்சாட்டில் கைதான ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆர்.டி.ஐ., எனப்படும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கேரள அரசு, 'மாநிலத்தில் சுற்றுலாவை விளம்பரப்படுத்த நாடு முழுதுமிருந்து 41 சமூக ஊடக பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். 'அதில், ஹரியானாவின் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர். அவர்களின் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றுக்கான செலவுகளை மாநில அரசே ஏற்றுக் கொண்டது. அனைவரும் கேரளாவின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்' என தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலைக் கிளப்பியது. உளவாளிக்கு கேரளாவில் ராஜ மரியாதையா? என, சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், காங்., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

தொடர்பு

இது குறித்து, முதல்வர் பினராயி விஜயனின் மருமகனும், மாநில சுற்றுலா துறை அமைச்சருமான முகமது ரியாஸ் கூறுகையில், ''யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவை நாங்கள் அழைத்த போது, அவருக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்பு குறித்து எங்களுக்கு தெரியாது. ''இப்போது தான் அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒருவர் உளவாளி என தெரிந்த பின், யாராவது அவரை அழைப்பரா?'' என, கேள்வி எழுப்பினார். கேரளாவில் பாரத மாதா படத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதே சமயம், உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் பதவி விலக வேண்டும். இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும். -செஷாத் பூனாவாலாதேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூலை 08, 2025 09:23

ஜோதி மல்ஹோத்ரா பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹரியானா மாநில அரசுக்கே அவர் பாகிஸ்தான் உளவாளி என்று இப்போது தான் தெரியும், அப்புறம் எப்படி கேரள அரசுக்கு முன்னதாகவே தெரியும் என்று எதிர்பார்க்க முடியும்?


sekar ng
ஜூலை 08, 2025 08:37

கேரளா கம்யூனிஸ்ட் அரசு பாக்கிஸ்தான பயங்கரவாத்திகளுக்கு ஆதரவு


nisar ahmad
ஜூலை 08, 2025 07:54

செய்திக்கும் முஸ்லிமுக்கும் என்னடா சம்மந்தம்.


Yuvaraj Velumani
ஜூலை 08, 2025 21:10

திருட்டு கும்பல் எதுக்கு இந்துக்களை கொன்னீங்க


ramani
ஜூலை 08, 2025 06:53

கேரளாவில் தேச விரோதிகள் அதிகம் உள்ள மாநிலமாக மாறிவிட்டது.


sasikumaren
ஜூலை 08, 2025 03:21

கேரளா ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதில் பல பேர் கொடூர குற்றவாளிகளாக இருப்பதால் வாழ் நாள் சிறையில் அடைக்க வேண்டும்


Sathyan
ஜூலை 08, 2025 03:03

கேரளாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்களின் நாடு பாகிஸ்தான் என்றே நினைக்கின்றனர், அந்த அளவுக்கு அங்கு மூளை சலவை செய்யப்படுகிறது. பாக் உளவாளி என்று தெரிந்த பின் அந்த உளவாளியின் பெயரை உடனே நீக்கியிருக்க வேண்டும், அவர்களின் ரத்தத்தில் இந்தியாதான் தன்னுடைய நாடு என்று இருந்திருந்தால் இவர்கள் முதுகில் குத்தக்கூடிய நன்றி கெட்டவர்கள் என்பதையே அவர்களின் இச்செயல் காட்டுகிறது.


Natarajan Ramanathan
ஜூலை 08, 2025 00:56

கேரள மாநில சுற்றுலா துறை அமைச்சருமான முகமது ரியாஸ் இந்தமாதிரி தேசவிரோதிகளை அழைப்பது ஒன்றும் வியப்பில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை